'இ-பதிவு' நடைமுறையில் சில சிக்கல்கள்: தடுமாறும் விவசாயிகள், தொழிலாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2021
23:49

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் பொதுமக்களின் தேவையற்ற நடமாட்டத்தை குறைக்க, நேற்று முதல் அமலாகியுள்ள கட்டாய 'இ-பதிவு' முறையில், சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென, விவசாயிகள், வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டை கடுமையாக்கி வருகிறது. அதில் ஒன்றாக, மாவட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பவர்கள் கட்டாய 'இ-பதிவு' செய்யும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இம்முறையில்,http://eregister.tnega.org என்ற தளத்தில் பொதுமக்கள் தாங்கள் பயணிப்பதற்கான தேவையை பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதில், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பதிவு செய்ய முடிகிறது.பதிவு அவசியம்மாவட்டத்துக்குள்ளேயும் 'இ-பதிவு' கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நேற்று காலை முதல் வெளியில் நடமாடும் நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 'இ-பதிவு' செய்து, அதற்கான சான்றை காண்பிக்க சொல்கின்றனர். 'இ-- பதிவு' இன்றி நடமாடுபவர்களை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர்.மக்களும் தற்போது நிலவும் ஆபத்தான, அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொண்டால், தொற்று சங்கிலியை உடைத்து, பரவலை பூஜ்ஜியமாக்க முடியும்.மாவட்டத்துக்குள்ளும் 'இ -- பதிவு' கட்டாயம் என்பதால், அன்றாட பணிகளுக்காக செல்வோரிடமும் போலீசார், பதிவு சான்று கேட்கும் சூழல் நிலவுகிறது. விவசாய பணிகள் வழக்கம் போல் நடக்க அரசு அனுமதித்துள்ளது.ஆனால், காலை, 10:00 மணிக்கு மேல் தோட்டத்துக்கு சென்று வரும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களிடம் போலீசார் 'இ-பதிவு' கேட்கின்றனர்.அதே போல், கிராமங்களில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் போதும், 'இ-பதிவு' கேட்கப்படுகிறது.பொள்ளாச்சியில் இருந்து, சூலக்கல் பகுதிக்கும் செல்லவும், ஆனைமலை செல்லவும் 'இ-பதிவு' கேட்கப்படுதால், விவசாயிகளும் தோட்டப்பணிகளை கவனிக்க செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால், விவசாய பணிகளும், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விற்பனை மற்றும் வினியோகமும் பாதிக்கப்படும் சூழல் பொள்ளாச்சி பகுதியில் நிலவுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக, 'இ-பதிவு' முறையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அல்லது, தளர்வுகள் கொண்டு வர வேண்டும், என, விவசாயிகள், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மக்கள் புரிந்து கொள்ளணும்!போலீசார் கூறுகையில், 'அரசு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்த போது, வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எதற்காக, யாருக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை, மக்களும் புரிந்து கொள்ளாமல் சுற்றுகின்றனர்.தற்போது, கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே, மக்கள் வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்த முடிகிறது. அதனால், வசிக்கும் பகுதியில் இருந்து வேறு தாலுகாவுக்குள் செல்வோரிடமும், வேறு மாவட்டத்தில் இருந்து வருவோரிடமும் 'இ-பதிவு' கேட்கப்படுகிறது. எதற்காக, இதுபோன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை மக்களும் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X