ஆவின் பால் விலை குறையவில்லை: கூடுதல் விலையால் பொதுமக்கள் அதிருப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
00:30

கோவை:ஆவின் பாலின் விலையை அரசு மூன்று ரூபாய் குறைத்த நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளிலும், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.ஆவின் பாலின் விலையை,லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த உத்தரவு, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, அரை லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட், ரூ.22, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் ரூ.24க்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.ஆனால், பெரும்பாலான ஆவின் பாலகங்களில், லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகங்களில், அரை லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட், ரூ.23, ஆரஞ்சு நிற ரூ.25 என விற்பனை செய்யப்படுகின்றன. இது குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள், 'எங்களுக்கு ஆவின் நிர்வாகத்தில் நேரடியாக பால் வழங்கப்படுவதில்லை எனவும், வெளியில் இருந்து வாங்கி வருவதால், விலையை உயர்த்தி விற்கிறோம்' என்கின்றனர்.கோவை ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார் கூறுகையில், ''ஆவின் பாலின் விலையை, உயர்த்தி விற்பனை செய்வது குறித்து, இதுவரை புகார் வரவில்லை. இன்று(நேற்று) காலை, முதல் ஆய்வு செய்யப்படுகிறது. முகவர்களுக்கு எம்.ஆர்.பி., விலையில் விற்பனை செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. முகவர்கள் உயர்த்தி விற்பனை செய்தால், அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். முகவர் அல்லாதவர்களுக்கு, பால் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதுபோன்ற புகார்கள் இருந்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.புகார் தெரிவிக்கலாம்!ஆவின் பால் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்க, பறக்கும் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று முதல் பல்வேறு பகுதிகளிலும், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பால் விலை உயர்த்தி விற்பனை செய்வது குறித்து, புகார் தெரிவிக்க கிழக்கு மண்டலம், 94890 43713, மேற்கு மண்டலம், 94890 43711, வடக்கு மண்டலம், 94890 43715, தெற்கு மண்டலம், 94890 43708, வாடிக்கையாளர் இலவச சேவை மையம் 1800 4254 4777 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X