உடம்புக்கு எப்படி இருக்கு? 'தனிமை' நோயாளிகளிடம் மாநகராட்சி மொபைல்போனில் விசாரித்து சிகிச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 மே
2021
02:06
பதிவு செய்த நாள்
மே 18,2021 00:34

கோவை:கோவையில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, தனிமையில் இருப்பவர்கள் நலமாக இருக்கிறார்களா; மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என, தொலைபேசி வாயிலாக விசாரித்து, அவசர உதவி தேவைப்படுவோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கும் பணியை, தன்னார்வலர்களுடன் இணைந்து, மாநகராட்சி மேற்கொள்கிறது.



கோவை மாநகராட்சி பகுதியில், 4,200க்கும் மேற்பட்ட வீதிகளில் கொரோனா தொற்று பரவியுள்ளது; 750க்கும் மேற்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. 5,000க்கும் மேற்பட்டோர், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, சிகிச்சை பெறுகின்றனர். அவர்களும், அவர்களை சேர்ந்தவர்களும், 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.



தொற்றுக்குள்ளானவர்கள் வெளியே வருவதால், மற்றவவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக, சில இடங்களில், தகர ஷீட்டால் மறைப்பு ஏற்படுத்தப்படுகிறது.அதேநேரம், மருத்துவ உதவி மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்குடும்பத்தினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை, தன்னார்வலர்கள் மூலம், மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கிறது.



போனில் நலம் விசாரிப்பு


மருத்துவ உதவி தொடர்பாக, 'சி பார் டி என்' மற்றும் 'நோ புட் வேஸ்ட்' ஆகிய அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள், தினமும் தொலைபேசி வாயிலாக பேசுகின்றனர்.மூச்சு விட சிரமம் இருக்கிறதா; நெஞ்சு வலி இருக்கிறதா; வீட்டில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வைத்திருக்கிறீர்களா; தினமும் இரு முறை ஆக்சிஜன் அளவு சரிபார்க்கிறீர்களா; தலைவலி இருக்கிறதா; காய்ச்சல் இருக்கிறதா; என்னென்ன மருந்து உட்கொள்கிறீர்கள் என்பது போல், 15 விதமான கேள்விகள் கேட்டு பதில் பெறுகின்றனர்.



ஒவ்வொருவரிடமும், 10 முதல், 12 நாட்கள் வரை தொடர்ந்து பேசுகின்றனர். பெறப்படும் பதில்களின் அடிப்படையில், ரெட், ஆரஞ்ச், கிரீன் என, நோயாளிகளை வகைப்படுத்துகின்றனர்.உயிருக்கு ஆபத்தான நிலையிலோ அல்லது மருத்துவ உதவி தேவைப்படுவோர்களோ இருப்பின், 'ரெட்' பட்டியலில் சேர்த்து, மாநகராட்சி மருத்துவ குழு மற்றும் சுகாதார ஆய்வாளருக்கு தெரிவிக்கின்றனர்.



டாக்டரின் தொலைபேசி எண், தனிமையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து அவர்களை, 'பாலோ' செய்து, மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 2,000 பேரை தொடர்பு கொண்டு, மருத்துவ உதவி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.


ஆசிரியர்கள் 'பாலோ அப்'தனிமைப்படுத்தியவர்கள், வீட்டிலேயே இருக்கிறார்களா என்பதை, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ்ஆப்' அழைப்பு மூலம் கண்காணித்து உறுதிப்படுத்துகின்றனர். இதுதவிர, பொதுமக்களுக்கு உதவி செய்ய, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்வோருக்கு, உடனடியாக உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.



120 பேர் மீட்பு'


சி பார் டிஎன்' அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணியன் கூறியதாவது:உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்போரை கண்டறிந்து, மருத்துவ குழுவுக்கு தெரிவித்து, அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கிறோம். கடந்த, 4 நாட்களில், 120 பேரை மீட்டுள்ளோம். 'நன்றி அறக்கட்டளை'யினர், ஆக்சிஜன் வசதியுடன், 5 ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளனர். அவற்றை, தனிமைப்படுத்தி இருப்பவர்களை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பயன்படுத்துகிறோம். உணவு தேவைப்பட்டால், தன்னார்வலர்கள் மூலம் அனுப்புகிறோம். இதர உதவிகள் கோரினால், செய்து கொடுக்க தகுந்த ஏற்பாடு செய்கிறோம். வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு, தேவையை பூர்த்தி செய்து கொடுக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202109:00:40 IST Report Abuse
Mahesh Kumar yella companies um odittu thaan irukku... Lockdown nu yaara yemathuraangannu theriyala??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X