உடல் எரியூட்ட ரூ.22 ஆயிரம் பறிப்பு! கொரோனா காலத்தில் இப்படி ஓர் கொடுமை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
00:54

கோவை:கோவையில், தனியார் மருத்துவமனையில் இறந்த, கொரோனா நோயாளியின் உடலை, ஆம்புலன்சில் எடுத்துச் சென்று எரியூட்டுவதற்கு, 22 ஆயிரம் ரூபாய் பறித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில், கொரோனா தொற்று பாதித்து, யாரேனும் உயிரிழந்தால், அதைப்பற்றிய தகவலை, அரசு மருத்துவமனை சவக்கிடங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, சுகாதார ஆய்வாளர் திருப்பதிக்கு தகவல் தெரிவிக்க, தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர், அருகாமையில் உள்ள மின் மயானங்களை பரிந்துரைத்து, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுப்பார்.அரசு மருத்துவமனையில் இறந்தால், ஆம்புலன்ஸ் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது. தனியார் மருத்துவமனையில் இறப்பு நேரிட்டால், ஆம்புலன்ஸ், மின் மயான செலவினங்களை, உறவினர்கள் செலவிட வேண்டும்.கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஒருவர், சாயிபாபா காலனியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இத்தகவல், சுகாதார ஆய்வாளர் திருப்பதிக்கு தெரிவிக்கப்பட்டது. துடியலுாரில் உள்ள மின் மயானத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.சடலத்தை 'பேக்கிங்' செய்து, ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, எரியூட்டுவதற்கு, 25 ஆயிரம் ரூபாய், சடலத்துக்கு மாலை அணிவித்து, சடங்கு செய்வதாக இருப்பின், 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தர வேண்டுமென, உறவினர்களிடம் பேரம் பேசியிருக்கின்றனர்.அவர்கள், சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு, பணம் கேட்பதாக கூறியுள்ளனர். அவர், தனியார் மருத்துவமனை அலுவலரை சந்திக்குமாறு கூறியுள்ளார்.பின், 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, சடலத்தை 'பேக்கிங்' செய்து கொடுத்திருக்கின்றனர். மயானம் வந்தபின், மீதி பணத்தை கொடுத்தால் மட்டுமே, சடலத்தை தருவோம் என, ஆம்புலன்சில் இருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும், 17 ஆயிரம் ரூபாய் கொடுத்ததும், சடலத்தை ஒப்படைத்துள்ளனர். இப்பிரச்னையில், மாநகராட்சி அலுவலர்கள், பணம் பறித்ததாக, நேற்று தகவல் பரவியது.போலீசில் புகார்இதுதொடர்பாக விசாரித்தபோது, பொது சுகாதாரத்துறை அலுவலகத்தை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் திருப்பதி, பணி மாற்று அடிப்படையில், மாநகராட்சியில் பணிபுரிவதும், அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இப்பிரச்னை தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க, துடியலுார் போலீஸ் ஸ்டேஷனில், மாநகராட்சி வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் புகார் கொடுத்துள்ளார்.மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்ட போது, ''மின் மயானத்தில் எரியூட்டுவது மட்டுமே மாநகராட்சி பணி. சுகாதார ஆய்வாளர் திருப்பதி, பொது சுகாதாரத்துறையை சேர்ந்தவர். தற்காலிகமாக மாநகராட்சியில் பணிபுரிகிறார். அவரை, விடுவிக்க அறிவுறுத்தியுள்ளேன். இப்பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X