தனுஷ்கோடியில் ஒதுங்கிய மிதவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
00:55

ராமேஸ்வரம்:கடலில் சர்வே பணியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு உதவும் எச்சரிக்கை மிதவை பெட்டி, தனுஷ்கோடி கடற்கரையில் ஒதுங்கியது.ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை அருகில், 5 அடி நீளம், 2 அடி உயரம், 3 அடி அகலத்தில் சிவப்பு நிறத்தில் மிதவை பெட்டி, நேற்று கரை ஒதுங்கியது. மீனவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தனுஷ்கோடி மரைன் போலீசார் மிதவையை ஆய்வு செய்தனர். பின், அவர்கள் கூறியதாவது:கடலின் நீரோட்டம், தட்பவெப்பம் குறித்து, நடுக்கடலில் நவீன கருவியை நிலை நிறுத்தி, கப்பலில் இருந்தபடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபடுவர்.மீன்பிடி படகுகள், ஆய்வு கருவியை சேதப்படுத்தாமல் இருக்க, இந்த மிதவையை பயன்படுத்தி உள்ளனர். 'டாக்டே' புயலால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, கயிறு அறுந்து, மிதவை கரையில் ஒதுங்கியுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.உள்வாங்கிய கடல்'டாக்டே' புயல் காரணமாக, புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில், இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.கோட்டைப்பட்டினம் பகுதியில், நேற்று அதிகாலை, கடல் திடீரென உள்வாங்கியது. இதனால், கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டின.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X