சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 மே
2021
12:56
பதிவு செய்த நாள்
மே 18,2021 00:56

புதுச்சேரி : மூத்த எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.



சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன்(98) காலமானார். இவர் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதியுள்ளார். 1923 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன். கோபல்லபுரத்து மக்கள் என்ற நாவலுக்காக 1991ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை பெற்றார். தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த, கி.ராஜநாராயணன் சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டையும் பெற்றுள்ளார்.



இவர் கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை என தமிழர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். கடந்த 2009 செப்.,25 அன்று இவரது மனைவி கணவதி அம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது படைப்புகளில் கோபல்லபுரம் கிராமம், கோபல்லபுரத்து கிராமத்து மக்கள் மற்றும் கதவு ஆகிய சிறுகதைகள் மிகவும் புகழ்பெற்றது. சமீபத்தில் தமிழக எழுத்தாளர்கள் பலரும் கி. ராஜநாராயணனுக்கு ஞானபீடம் விருதளிக்க வேண்டுமெனக் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



இவர் தன்னுடைய அனுபவங்களையும், தான் அறிந்த / கேட்ட கதைகளையும் நம்மிடம் கதையாக கூறும்போது, அவர் காலங்களை கையாண்ட விதம் புதுமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. தற்போதைய நூற்றாண்டில் இருந்து கதை சொல்லும் இவர், நினைவுகளின் வழியாக அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப அந்த கதையின் உரையாடல் களுக்கும் அழைத்து சென்று விடுவார். அத்துடன் புராணங்களையும் இணைத்து தற்போது பேசிக்கொண்டிருப்பவற்றுடன் இணைத்து விடுவார். ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு காலங்களுடன் முன்னும், பின்னும் சென்று ஆராய்ந்து நடத்தும் ராஜநாராயணனின் நுட்பம் தான் இந்த அனுபவக் கதைகளை முக்கியமாக்குகிறது.


இத்தனை பெருமைபெற்ற ராஜநாரயணன், இன்று வயது மூப்பு காரணமாக, காலமானார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202118:40:57 IST Report Abuse
பாமரன் நல்ல எழுத்தாளர்... பள்ளி நாட்களில் இவரின் புத்தகங்கள் தஞ்சை மாவட்ட மைய நூலகத்தில் படித்தது இனிய அனுபவம்... மலரும் நினைவுகள்... அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...🙏🙏
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-மே-202118:05:48 IST Report Abuse
vnatarajan சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும்படியும் கதையின் போக்கை எடுத்து சென்றவர் கிராமத்து மண் வாசனையில் கதைகளையும் கட்டுரைகளையும் படைத்தவர். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
18-மே-202115:47:26 IST Report Abuse
vivek c mani சிறந்த இலக்கியநயம் கொண்ட தமிழ் படைப்பினை தெவிட்டா வண்ணம் எழுதுகோலால் ஓட விட்டவர். ஓம் ஷாந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X