பொதுமக்களிடம் கெடுபிடி காட்டாத போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:13

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட எல்லைகளில், போலீசார் செக் போஸ்ட் அமைத்து, இ-பதிவின்றி வந்த வாகனங்களை அறிவுரைத்து திருப்பி அனுப்பினர்.தமிழகம் முழுவதும் நேற்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-- பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இ-பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த ரசீதில், வாகனத்தின் எண், பயணியின் பெயர், பயணத்திற்கான காரணம், இடம் உள்ளிட்ட தகவல் உள்ளது. இதை பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்து, பயணத்தின் போது போலீசாரிடம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி, மடப்பட்டு, சின்னகள்ளிப்பட்டு, கெங்கராம்பாளையம், ஒலக்கூர், மழவந்தாங்கல் உட்பட மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில், போலீஸ் செக்- போஸ்ட் அமைக்கப்பட்டது. இந்த வழியாக மாவட்டத்திற்குள் வருகின்ற கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி, வாகன இ-பதிவு ஆவணத்தை போலீசார் சோதனை செய்து, அனுப்பினர். மடப்பட்டு செக் போஸ்ட்டில் உரிய ஆவணமின்றி வாகனங்களில் வந்த நபர்களிடம், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வம், கொரோனா தாக்கத்தை உருக்கமாக எடுத்துக் கூறினார்.கொரோனா தொற்று அபாயத்தை அறியாமல், அவசர தேவையின்றி வெளியே வராதீங்க, உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை மனதில் கொண்டு, அநாவசியமாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X