ஜரூர்:  நரசிங்கபுரம் - வடவாம்பலம் பாலம் கட்டுமான பணி... விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:15

விழுப்புரம்; விழுப்புரம் அருகே நரசிங்கபுரம் - வடவாம்பலம் கிராமங்களுக்கு இடையே ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட சிறுபாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் பண்ருட்டி, கோலியனுார் கூட்ரோடு, வளவனுார் வழியாக தான் பூவரசங்குப்பம் கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால், பக்தர்கள் விழுப்புரம் மாவட்ட எல்லையில் இருந்து, கோவிலுக்கு 20 கி.மீ., சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.மேலும், சி.கள்ளிப்பட்டு, சின்னமடம், வடவாம்பலம், பூவரசங்குப்பம், நரசிங்கபுரம், சிறுவந்தாடு, மோட்சகுளம் கிராமங்களில் 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில் நரசிங்கபுரம் - வடவாம்பலம் கிராமங்களுக்கு இடையே மலட்டாறு செல்கிறது. இந்த ஆற்றில் மழை காலங்களில் தண்ணீர் சென்றால், மேற்கூறிய 15 கிராமங்ளின் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையுள்ளது. அதனையொட்டி, கடந்த 2019ம் ஆண்டு டிச., 19ம் தேதி, நரசிங்கபுரம் - வடவாம்பலம் இடையே ரூ.5 கோடி செலவில் நெடுஞ்சாலை துறையின் நபார்டு திட்டத்தில் உயர்மட்ட சிறுபாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த உயர்மட்ட சிறுபாலம் 56.52 மீட்டர் நீளத்திலும், 10 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை ஒட்டியுள்ள இருபுறத்திலும் மலட்டாறு பகுதியில் 100 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சிமெண்ட் பிளாக் கற்கள் பதித்து கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பாலம் பணிகள் முழுவதும் முடிவடைந்தால், சி.கள்ளிபட்டு, சின்னமடம், வடவாம்பலம், பூவரசங்குப்பம், சிறுவந்தாடு, மோட்சகுளம், மடுகரை, வளவனுார் உட்பட 20 கிராம மக்கள் பயனடைவர். மேலும், தென்மாவட்ட பக்தர்கள் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சுலபமாக சி.கள்ளிபட்டு, வடவாம்பலம் வழியாக எளிதாக சென்று வர முடியும்.\



கடந்தாண்டு கொரோனா நோய் தொற்று முழு ஊரடங்கை யொட்டி, இந்த பாலம் கட்டுமான பணி சில மாதங்கள் தடைபட்டது. பின், இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது பாலத்திற்கு செல்லும் வழியில் தார்சாலை அமைக்கும் பணிகளும், ஆற்றின் கரைகளை பலப்படுத்தும் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரு மாதத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறந்து விடப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X