சிறுமி கடத்தல் இருவர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
சிறுமி கடத்தல் இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:33

திட்டக்குடி-15 வயது சிறுமியை கடத்திய இருவரை போலீசார் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.ராமநத்தத்தைச் சேர்ந்தவர் 15 வயதுடைய 10ம் வகுப்பு மாணவி. இவரை நேற்று முன்தினம் 16ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.அதில், சிறுமியை ராமநத்தத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் பெரியசாமி, 22; மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூபதி மகன் பரிதி, 26; ஆகியோர் கடத்திச் சென்றது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று ராமநத்தம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெரியசாமியை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பரிதியையும் கைது செய்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X