ரயிலில் சிக்கி வாலிபர் பலி | கடலூர் செய்திகள் | Dinamalar
ரயிலில் சிக்கி வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:33

பெண்ணாடம்-ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அரியலுார் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்துார் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி செல்லும் வழியில் 1 கி.மீ., துாரத்தில் நேற்று பிற்பகல் 12:15 மணியளவில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் பாதையையொட்டி இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்து வந்த ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் பால்வண்ணநாதன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார், என விசாரித்து வருகின்றனர்.இறந்த வாலிபர் நீல நிற கட்டம் போட்ட கைலி, ரோஸ் நிற சட்டை அணிந்திருந்தார். ஹீரோ பைக் சாவி வைத்துள்ளார். குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X