அதிருப்தி; பொதுமக்கள் மீது சுகாதாரத் துறை அதிகாரிகள்... கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:37

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கிலும்பொதுமக்கள் கட்டுக்கடங்காமல் வெளியே வருவதால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



கொரோனா இரண்டாவது அலை பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக 853 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 38 ஆயிரத்தைக் கடந்து விட்டது.நேற்று முன்தினம் 10 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பும் 400 ஆக அதிகரித்து வருகிறது.இதே நிலை தமிழகம் முழுதும் உள்ள நிலையில், கடந்த மே 10ம் தேதி முதல், வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6:00 மணி முதல் பகல் 10:00 வரையில் மட்டுமே திறக்க வேண்டும் என, புதிய கட்டுப்பாடும் அமலுக்கு வந்தது.ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 10ம் தேதி முதல், கடலுார் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் அபராதமாக போலீசார் வசூலித்துள்ளனர்.ஆனாலும், கொரோனா அச்சம் கொஞ்சமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.



அதிகாலை நேரங்களில் கடலுார் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கடைவீதிகள் திருவிழா கூட்டம் போல் மக்கள் பொருட்கள் வாங்க கூடுகின்றனர். போலீசார் கெடுபிடி காட்டக் கூடாது என்ற உத்தரவால், தேவையின்றி சுற்றித் திரிவோரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.கொரோனா பாதித்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு இடமில்லாமல் சிரமப்படும் நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி சுற்றித் திரிவதால் அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிருப்தியடைந்துள்ளனர்.



எனவே, காரணமின்றி சுற்றித் திரிவோரை கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய கடைகளை தவிர்த்து இயங்கும் மற்ற கடைகளை மூடவும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து, மக்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202107:09:40 IST Report Abuse
மனுநீதி அடிக்காமல் கேட்க மாட்டார்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-மே-202121:58:53 IST Report Abuse
S. Narayanan மோடிஜி அவர்களை திமுக மற்றும் காங்கிரஸ் அதன் தோழமை கட்சிகள் குறைகுறை சொல்லி சொல்லி மக்களை முட்டாளாக்கி தடுப்பூசி போட்டால் உயிருக்கு ஆபத்து என்று மக்களிடையே உயிர் பயத்தை உண்டக்கியவர்களுக்கு இப்போது தான் உண்மை நிலை புரிய ஆரம்பித்து இருக்கிறது. மார்ச் வரை கட்டுக்குள் இருந்த koronaa ஏப்ரல் மாதத்தில் துவங்கி மே மாதத்தில் பூதாகாரமாக வெடித்து மக்களை பலி வாங்கி கொண்டிருக்கிறது. சற்று நினைத்து பார்க்க வேண்டும். Coronaa பற்றி எதுவுமே தெரியாத மத்திய அரசும் மோடிஜி யும் முதல் அலை கட்டுப்படுத்த எத்தனை முயற்சி எடுத்து இந்தியா முழுவதும் கடுமையாக வேலை செய்து இருப்பார்கள். இப்போது பதவி ஏற்ற வுடன் நாளுக்கு நாள் பெருகும் coronaavai கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தும் காங்கிரஸ் காரணுங் வெட்டி பேச்சு பேசிக்கிட்டு மக்களுக்கு எந்த சேவையும் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறார்கள்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
18-மே-202107:27:45 IST Report Abuse
a natanasabapathy ஆளும் கட்சியை எதற்கு எடுத்தாலும் குறை கூறி வந்த தி மு க வுக்கு இப்போதுதான் உண்மை புரிகிறது போலும் மக்களை திருத்தவே முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X