தனிமையில் இருப்போருக்கு உதவ 'கால் சென்டர்' துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

18 மே
2021
06:24
பதிவு செய்த நாள்
மே 18,2021 05:45

உள்ளகரம்- -பெருங்குடி மண்டலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம், தினசரி நலம் விசாரித்து, தேவையான மருத்துவ உதவிகள் மேற்கொள்வதற்கான, 'கால் சென்டர்' நேற்று துவக்கப்பட்டது.



பெருங்குடி மண்டலத்தில் நேற்றுவரை, கொரோனா, இரண்டாவது அலை தொற்றால், 2,574 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், 75 சதவீதம் பேர்வரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அவர்களின் தினசரி நோய்த் தொற்றின் தாக்கம், தேவையான மருத்துவ, அத்தியாவசிய தேவைகள் குறித்து களப்பணியாளர்கள் வாயிலாக மாநகராட்சியினர் நிறைவேற்றி வருகின்றனர்.இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல் நிலை தினசரி கண்டறியவும், தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கவும், பெருங்குடி மண்டலத்தில், 'கால் சென்டர்' நேற்று திறக்கப்பட்டது.அதன் செயல்பாடுகளை, கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி முருகேஷ் நேற்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நலம் விசாரிப்பு, 'கால் சென்டர்' செயல்பாடுகள் குறித்து, மண்டல உதவிக் கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது:பெருங்குடி மண்டலத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த, 'கால் சென்டர்' வாயிலாக, தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிப்படுத்திக் கொண்டிருப்பவர்களின் தினசரி உடல் நிலை கண்காணிக்கப்படுகிறது.அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் உதவிகள் மேற்கொள்ளப்படுகிறது.



களப்பணியாளர்கள் தங்கள் பணிகளை நிறைவாக மேற்கொள்கின்றனரா என்பதும் கண்காணிக்கப்படுகிறது.இதற்காக மருத்துவர்கள் அடங்கிய உள்ளிட்ட, 60 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த, 'கால் சென்டர்' தினமும் காலை, 7:00 மணி முதல் மாலை, 3:00 மணிவரை, ஒரு, 'ஷிட்ப்' ஆகவும், மாலை, 3:00 மணியில் இருந்து இரவு, 10:00 மணிவரை, இரண்டாவது, 'ஷிப்ட்' ஆகவும் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202104:56:40 IST Report Abuse
ஆப்பு கால் போட்டா ஒரு பய போனை எடுத்து பேசறதில்லை. எவனோ டுபாக்குர் பார்ட்டி இந்த காண்டிராக்டை வாங்கிட்டு, ஷிஃப்டுக்கு 60 பேர் வேலை செய்யுறத கணக்கு காட்டிக்கிட்டிருக்கான். லேசா, மஸ்டர் ரோல் வாடை வரலை? இறையன்பு ஐயா இதை கவனிப்பாரா?
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
19-மே-202103:05:45 IST Report Abuse
Manian இதற்கான மாமூலை வசூலிக்க எங்கள் கூலிப்படை பின்னால் வரும். மாமூல் இல்லாத சேவை இப்போதைக்கு இல்லை தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X