கொரோனா நி।வாரண நிதி திருநங்கையர் தாராளம் | சென்னை செய்திகள் | Dinamalar
கொரோனா நி।வாரண நிதி திருநங்கையர் தாராளம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2021
05:51

சென்னை-சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும், 2,000 திருநங்கையரில், பெரும்பாலானோர் ரயில்களிலும், கடைகளிலும் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கொரோனா தொற்றை தடுக்க, அரசுக்கு உதவியாக, வீதி வீதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சென்னையில் வசிக்கும், 50 திருநங்கையர் இணைந்து தலா, 1,000 வீதம், 50 ஆயிரம் ரூபாய் சேர்த்து, முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு, வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.இது குறித்து, திருநங்கையர் சுதா, ஜெயா ஆகியோர் கூறியதாவது:கொரோனா எனும் கோரப்பிடியில் இருந்து, அனைவரும் முழுமையாக மீளும் வரை, அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், நாங்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.தாராளமாக கொரோனா நிவாரண நிதி வழங்கும்படி, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததைப் பார்த்து, எங்களால் முடிந்த அளவு நிதி வழங்கி உள்ளோம். வசதி, வருமானம் எதுவும் இல்லாத நாங்களே, சமூக அக்கறையுடன் நிவாரண நிதி வழங்குகிறோம்.எங்களைப் பார்த்து, சமூகத்தில் வசதி படைத்தவர்கள் தாங்களாக முன்வந்து, தாராளமாக கொரோனா நிதி வழங்குவர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X