எல்லா கடைகளும் தான் மூடியாச்சே... எங்கே தான் போகிறீர்கள் மக்களே...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
07:17

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பகுதியில் மதியம் 2:00 மணி வரையிலும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. அனைத்து கடைகளும் மூடியிருக்கும் நிலையில் இவர்கள் எங்கே தான் போகிறார்களோ தெரியவில்லை, என போலீசார் புலம்புகின்றனர்.



தமிழகத்தில் மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறு மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி, மீன் கடைகள், ஓட்டல்களில் பார்சல், பால், மருந்தகம் இயங்க மதியம் 12:00 மணி வரை அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த சேவை காலை 6:00 முதல் 10:00 மணி வரை தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நேரத்தில் காய்கறி கடைகள், மளிகை, இறைச்சி கடைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழக்கடைகள், பேக்கரிகள் செயல்படுகின்றன.



ராமநாதபுரத்தில் காலை 10:00 மணிக்கு மேல் அனைத்து காய்கறி, மளிகை கடைகள் மூடப்பட்டாலும், நகர் பகுதியில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் சிறிதும் குறைந்த பாடில்லை. எல்லா சாலைகளிலும் ஏராளமான டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள் அதிகமாக செல்கின்றன.



இவற்றைப் பார்க்கும் போது இது ஊரடங்கு தானா என்ற கேள்வி தான் எழுகிறது. ஆங்காங்கே சோதனைக்காக நிறுத்தப்பட்ட போலீசார் இதனை வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். அப்படியே நிறுத்தி கேட்டாலும், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி செல்கின்றனர்.



இதுபோன்ற ஊரடங்கால் கொரோனா பரவலை எப்படி கட்டுப்படுத்த முடியும். அனுமதிக்கப்பட்ட காலை 10:00 மணிக்கு மேல் போலீசார் வாகன போக்குவரத்தையும், மக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு மட்டுமின்றி யாரையும் அவசியமின்றி அனுமதிக்க கூடாது.எஸ்.பி., கார்த்திக் இந்த விஷயத்தில் கண்டிப்பு காட்ட வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம்.-----

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202104:53:34 IST Report Abuse
ஆப்பு ஹி.ஹி.. வேறே கடை ஏதாவது தொறந்திருக்கான்னு பாக்கலாம்னுதான்.
Rate this:
Cancel
18-மே-202119:17:42 IST Report Abuse
ஆப்பு ஊட்டுக்குள்ளாறயே இருந்தா மன உளைச்சல். தவிர பெரிய பங்களாவா இருக்கு? இல்ல, பிரதமர், முதல்வர்னு பெரிய ரூமில் உக்காந்து வீடியோ காலில் பேச வேலை வெட்டியுமில்லை. போலூஸ் மாதிரி சுதந்திரமா ரோந்துன்னு சுத்தவும் முடியாது. வுட்டில் ஒரு நாய்க்குட்டியை கட்டிப் போட்டாலே கத்தி கதவடைச்சுடும். மனுசங்க எப்பிடி?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X