தேர்நிலையம் ரோட்டில் நெரிசல்: விரிவுபடுத்தியும் தீராத தலைவலி | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தேர்நிலையம் ரோட்டில் நெரிசல்: விரிவுபடுத்தியும் தீராத தலைவலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2021
23:50

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, ரோடுகள் விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தப்பட்டன. மழைநீர் வடிகால் மற்றும் ரோடுகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன.அதில், பொள்ளாச்சி - உடுமலை ரோடு - பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சென்டர் மீடியனுடன் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரோட்டின் பெரும்பகுதி, 'பார்க்கிங்' பகுதியாக மாறியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:ரோடு விரிவாக்கம் செய்ததும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்நிலையம் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு வருபவர்கள், வாகனங்களை, 'பார்க்கிங்' செய்ய போதிய இடவசதியில்லை. இதனால், ரோட்டிலே தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நிறுத்தம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எந்த நோக்கத்துக்காக ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டதோ, அது முழு பலன் அளிக்காத நிலை நீடிக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X