சும்மா சுத்தினா... போலீஸ் 'கேஸ்' போடுவாங்க! கட்டுக்கடங்காததால் கடுமையானது ஊரடங்கு உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2021
23:52

பொள்ளாச்சி:அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வாகனங்களில் சுற்றுவதாலும், சுகாதார அறிவுறுத்தலை கடைபிடிக்காததால், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கட்டுக்கடங்காதோரால், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.கொரோனா தொற்று பரவலின், இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தீவிரம் காட்டி வருகிறது.தொற்று பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6:00 முதல், பகல், 10:00 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.கடைகள் திறந்திருக்கும் போது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர். இதனால், ஊரடங்கு அமலில் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.காலை, 10:00 மணி வரை, புற்றீசல் போன்று மக்கள் திரள்கின்றனர். அதன்பின், ஊரடங்கு கடைபிடிப்பதால், எவ்வித பலனும் ஏற்படுவதில்லை. எவ்வித கட்டுப்பாடும் இன்றி, இருசக்கர வாகனங்கள், மற்றும் கார்களில் மக்கள் பயணிக்கின்றனர்.கொரோனா தொற்று தானாக நகர்வதில்லை; பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு இடத்துக்கும் நகர்ந்து செல்வதால் வேகமாக பரவுகிறது. தொற்று பாதிப்பால், மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, படுக்கை கிடைப்பதே அரிதாகி வருகிறது. உயிர்காக்கும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தொற்று பாதித்த நோயாளிகள் அல்லாடுகின்றனர். பாதிப்புகளும், பாதித்தோர் படும் சிரமமும் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமலும், தொற்று பரவலின் தீவிரத்தையும் உணராமல், அத்தியாவசியமின்றி வாகனங்களில் நகர்வலம் வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளில், வாகன போக்குவரத்தையும், அத்தியாவசியமின்றி வெளியில் சுற்றும் மக்களையும் கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அத்துமீறும் கடைக்காரர்கள், வாகனங்களில் வருவோருக்கு அபராதம் விதித்து, வழக்குப்பதிவு செய்வதை தொடர்ந்து மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், மளிகை, காய்கறி கடைகளுக்கான அனுமதியையும் ரத்து செய்து, எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X