'சரக்கு' வச்சிருக்கேன்... பதுக்கி வச்சிருக்கேன்! ஊரடங்கிலும் அடங்காத 'சில்லிங்' வியாபாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2021
00:01

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில், ஊரடங்கை பயன்படுத்தி, மது வகைகளை பதுக்கி வைத்து, மிக அதிக விலைக்கு 'சில்லிங்' விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.முழு ஊரடங்கின் காரணமாக, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் 'சரக்கு' கிடைக்காமல் தவிக்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், புதுப்புது நபர்கள் பலரும் 'சில்லிங்' மது விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதனால், பல ஆண்டுகளாக மது 'சில்லிங்' விற்பனை செய்யும் டாஸ்மாக் பார் ஊழியர்கள், அரசியல் கட்சி பின்புலம் உள்ளவர்களே திகைப்படைந்துள்ளனர்.கடந்தாண்டு, கொரோனா பரவலின் போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகள் நீண்ட நாட்களுக்கு மூடப்பட்டன. அப்போது, மது வாங்கி விற்று சம்பாதித்தவர்கள், டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்படும் போது, மது வகைகளை வாங்கி பதுக்கி, விற்பதை 'சைடு பிசினஸ்' ஆக மாற்றியுள்ளனர்.இம்முறை 2 நாட்களுக்கு முன்பே ஊரடங்கு குறித்து முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது, 'பதுக்கல் பார்ட்டி'களுக்கு வசதியானது. டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்புடன், பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டனர்.ஊரடங்கு அமலான முதல் ஒரு வாரம் விற்பனையை துவங்காமல், பொறுமை காத்தனர். 'குடி'மகன்கள், வழக்கமான சில்லிங் விற்பனையாளர்களிடம் இருந்த சரக்கு கையிருப்பு காலியான பிறகு, கடந்த சில நாட்களாக, அதிக விலைக்கு விற்பனையை துவக்கியுள்ளனர்.ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு, 300 - 400 ரூபாய் வரை லாபம் வைத்து விற்கின்றனர். மதுப்பிரியர்களும், வேறு வழியின்றி சொன்ன விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.இந்த சட்ட விரோத மது விற்பனையை, அதிகாலை நேரத்தில் கிராமம் கிராமமாக சென்று, நகரப்பகுதியில் குறிப்பிட்ட இடத்திலும் 'டோர் டெலிவரி'யாக செய்கின்றனர். மது பிரியர்களை குறி வைத்து, எவ்வித உழைப்பும் இன்றி, பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த 'புது வியாபாரிகள்' புறப்பட்டுள்ளதாக தெரிகிறது.புற்றீசல் போன்று கிளம்பியுள்ள இவர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202117:42:12 IST Report Abuse
Ram Pollachi பீடி, சிகரெட் வத்திபெட்டி, புகையிலை விலையை கேட்டால் பத்திக் கிட்டு வருது கோபம். கொரோனா இறப்பை தடுக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் கடையை திறந்தால் கூட போதும். நரகத்தில் தவிக்கும் மதுப்பிரியர்களுக்கு சொர்கத்தின் கதவுகளை சீக்கிரம் திறந்துவிடுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X