அதிகரிப்பு! 1797 பேருக்கு கொரோனா தொற்று ..... புதிய உச்சமாக 33 பேர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

19 மே
2021
07:00
பதிவு செய்த நாள்
மே 19,2021 00:55

புதுச்சேரி:புதுச்சேரியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 33 பேர் இறந்தனர். 1797 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.



புதுச்சேரியில் நேற்று முன்தினம் 9559 பேருக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் புதுச்சேரியில் 1380, காரைக்கால் 244, ஏனாமில் 123, மாகியில் 50 பேர் உட்பட 1797 பேருக்கு தொற்று உறுதியானது. கதிர்காமம் மருத்துவமனையில் 429 பேர், ஜிப்மரில் 519, கொரோனா கேர் சென்டரில் 671 பேர் உட்பட 2147 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



15 ஆயிரத்து 330 பேர் லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு, 87 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரியில் சில நாட்களாக குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.ஒரே நாளில் 1670 பேர் குணமாகினர். இது வரை, 69 ஆயிரத்து 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடதக்கது.



33 பேர் பலி:



கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை சற்று குறைந்தாலும், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த, 28 வயது இளைஞர் உட்பட புதுச்சேரியில் 29 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் ஒருவர், மாகியில் 2 பேர் உட்பட 33 பேர் இறந்தனர். இதில், 15 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை இல்லாத அளவாக ஒரே நாளில் 33 பேர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



புதுச்சேரியில் 108 சுகாதார பணியாளர்கள், 106 முன்கள பணியாளர்கள், 728 பொதுமக்கள் நேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை, 2வது டோஸ் உட்பட 2 லட்சத்து 32 ஆயிரத்து 333 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முத்தமிழ் ஜெயன் - Karaikal,இந்தியா
19-மே-202122:39:36 IST Report Abuse
முத்தமிழ் ஜெயன் இங்கு மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிப்பதில்லை , முகக்கவசம் அணிவதும் இல்லை. இதைக் காணும்போது பேரச்சம் ஏற்படுகிறது. புதுவைக்கென செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் , விழிப்புணர்வு செய்திகள் அனைத்து மக்களையும் சென்றடையும். முத்தமிழ் காரைக்கால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X