ஷட்டரை துளையிட்டு திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2021
01:27

தாராபுரம், அலங்கியத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அலங்கியம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, கடை ஷட்டரை கட்டிங் மெஷின் கொண்டு அறுத்து, துளையிட்டு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 750 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கடையில் இருந்த 'சிசிடிவி' பதிவுகளை பார்த்த போது, வீடியோ பதிவாகும் 'டிஸ்க்' கழற்றப்பட்டிருந்தது. இந்த 'டிஸ்க்' கடையில் இருந்து, 600 மீட்டர் துாரத்தில் வீசப்பட்டிருந்தது. போலீசார், திருடர்களை தேடி வருகின்றனர்.மின்வாரிய தொழிலாளி பலிதாராபுரம் பி.ஆர்., மெயின் வீதியை சேர்ந்தவர் காளிமுத்து, 32. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். கடந்த, 25ம் தேதி தாராபுரம் சங்கர் மில் அருகே 'டிரான்ஸ்பார்மரில்' காளிமுத்து உள்ளிட்டோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காளிமுத்து மீது மின்சாரம் பாய்ந்தது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காளிமுத்து நேற்று முன்தினம் இரவு இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.மின்சாரம் தாக்கி மூதாட்டி பலிகாங்கயம், கீரனுார், செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சொர்ணாத்தாள், 66. இவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் மின்கம்பி உரசி, தீப்பொறி வந்ததால், அந்த மரத்தின் கிளையை வெட்டுவதற்காக நேற்று முன்தினம் மாலை அரிவாளுடன் சென்றார். இரவு நேரமாகியும் சொர்ணாத்தாள் வீடு திரும்பாத காரணத்தால் குடும்பத்தினர் அவரை தேடினர். மின்கம்பியை பிடித்தபடி, மின்சாரம் தாக்கியதில் பாதி உடல் எரிந்த நிலையில் இருந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X