தடுப்பூசி செலுத்த ரூ.500 லஞ்சம் மாதவரத்தில் நடக்குது அட்டூழியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 ஜூன்
2021
06:36
பதிவு செய்த நாள்
ஜூன் 01,2021 06:12

புழல்-மாநகராட்சி மருத்துவமனை ஊழியர்கள், கொரோனா தடுப்பூசிக்கு, 'லஞ்சம்' வாங்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்த புகாரை, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 23வது வார்டில், மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை உள்ளது. இங்கு, ஏப்., முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல், தடுப்பூசி இருப்பு இல்லை என பலரை திருப்பி அனுப்பி உள்ளனர்.புழல் அடுத்த விநாயகபுரம், கல்பாளையம், சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்த நந்தகோபால், 29, நேற்று காலை, தடுப்பூசி போட்டுக் கொள்ள, அவரது மனைவியுடன் சென்ற போதும், தடுப்பூசி இல்லையென, ஊழியர்கள் கூறியுள்ளனர்.அவர் வெளியே வந்த போது, அங்குள்ள காவலாளி தினகரன், 42, என்பவர் அவர்களை நெருங்கி, 'கோவிட்ஷீல்டுக்கு, 500 ரூபாய்; கோவாக்சினுக்கு, 800 ரூபாய் கொடுத்தால், தடுப்பூசி கிடைக்கும்' என, ரகசியமாக கூறியுள்ளார். இதையடுத்து, நந்தகோபால், அங்குள்ள மற்றொரு ஊழியர் பிரசாத், 18, என்பவரை சந்தித்து பேச, அவரும் பணம் கொடுத்தால் தடுப்பூசி கிடைக்குமென கூறியுள்ளார்.இதனால், 300 ரூபாய் ரொக்கமாகவும், 200 ரூபாயை, 'கூகுள் பே' மூலமும், நந்தகோபால் கொடுத்துள்ளார்.அவர் கொடுத்த துண்டு சீட்டு மூலம், அங்குள்ள மருத்துவர், நந்தகோபாலுக்கு, 'கோவிட்ஷீல்டு' தடுப்பூசி செலுத்திஉள்ளார்.தடுப்பூசிக்கு லஞ்சம் வாங்குவதால், அதிருப்தியான நந்தகோபால், அதற்காக நடந்த பேச்சுவார்த்தை மற்றும், 'கூகுள் பே' வில், பிரசாத் என்ற ஊழியரின் மொபைல் போனுக்கு, 200 ரூபாய் அனுப்பியதற்கான 'ஆடியோ, வீடியோ' ஆதாரங்களுடன், புழல் போலீசாரிடம் புகார் செய்தார்.இது குறித்து, இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.முறைகேடு பணத்திற்காக, வசதியானவர்களின் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் முறைகேடு, மாதவரம் மண்டலத்தில் தொடர்ந்து நடக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 25 மற்றும் 28வது வார்டுகளில், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் இணைந்து, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், புகார் எழுந்தது. தற்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூன்-202106:23:14 IST Report Abuse
ஆப்பு வெறும் 500 க்கே வாயைப் பொளக்கறீங்க.. குஜராத்துல செத்து 10 நாள் ஆனவங்களுக்கு தடுப்பூசி போட்டோம்னு குறுஞ்செய்தி அனுப்பிட்டு, அந்த மருந்தையெல்லாம் வெளீல வித்துடறாங்களாம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜூன்-202120:52:38 IST Report Abuse
Lion Drsekar அவர் அவரது கடமையை செவ்வனே செய்கிறார், அவரது கடமை உணர்வுக்கு பாராட்டுக்கள், வேறு வழி இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
01-ஜூன்-202118:49:27 IST Report Abuse
unmaitamil நாங்க ஆட்சிக்கு வந்தால் இப்படித்தான். உடன்பிறப்புக்கள் நாங்கள், மயானத்தில் டோக்கன் போட்டு காசு சம்பாதிப்போம். தடுப்பூசிபோடவருபவர்களிடம் டோக்கன் போட்டு காசு வாங்குவோம். ஹோட்டல்களில் இலவசமாக சாப்பிடுவோம். காசு கேட்டால் அடிப்போம். பதிவாளர் அலுவலகத்திலும் இனி பதிவு செய்ய டோக்கன் போட்டு காசு வாங்குவோம். இனி எல்லா இடங்களிலும் டோக்கன் போட்டு சம்பாதிப்போம். காசு கேட்டால் அடிப்போம். இதையெல்லாம் தெரிந்ததுதானே மக்கள் ஓட்டுபோட்டார்கள். இனி அடுத்த 5,வருடம் இப்படித்தான் மக்களே. எல்லோரும் பழகிக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X