சில வரி செய்திகள்।
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2021
00:28

கஞ்சா விற்ற நான்கு பேர் கைது



பம்மல்: திருநீர்மலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு, அவ்வப்போது இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வதாக, சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், நேற்று முன்தினம், அந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது 2 கிலோ கஞ்சா சிக்கியது. சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா, 22, என்பவர், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜெயசூர்யா, பம்மலைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், 21, உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.-



750 கிலோ குட்கா பறிமுதல்



அனகாபுத்துார்: அனகாபுத்துார், அண்ணா நகரில், மளிகைக்கடை நடத்தி வருபவர், பிரசாத், 36. இவர் 'குட்கா' விற்பனை செய்வதாக, சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பிரசாத்தை பிடித்து விசாரித்ததில், அவரது உறவினரான அருட்செல்வன், 36, என்பவர், வண்டலுாரில் குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது.இந்நிலையில், நேற்று மதியம் அங்கு நடத்திய சோதனையில் 750 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, அனகாபுத்துாரைச் சேர்ந்த பிரசாத், அருட்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.



கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது



வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, நியூ ஆவடி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். இதில், ஓட்டுனர் அரவிந்த், 26, என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்ததில், ஏழு கேன் கள்ளச்சாராயம் சிக்கியது. அவரை கைது செய்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.



மொபைல்போன் திருடர்கள் கைது



தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பகுதிகளில், தொடர்ந்து மொபைல் போன்கள் திருடு போவதாக, போலீசாருக்கு புகார்கள் வந்ததால், போலீசார் தண்டையார்பேட்டையில் தீவிரமாக கண்காணித்தனர்.நேற்று, இப்பகுதியில், சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரிடம் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், தீவிரமாக விசாரித்ததில், மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர், 21; யுவராஜ், 21 என தெரிந்தது. இருவரையும் கைது செய்து மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.



திருடர்கள் ஓட்டம்



புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ, 45. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து துாங்கினார். அப்போது, வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். சத்தம் கேட்டு, இளங்கோ எழுந்து கூச்சலிட்டார். அதற்குள், அந்த மர்ம நபர்கள், அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்து கொண்டனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்ததை அடுத்து, ரோந்து போலீசார் மர்ம நபர்களை தேடினர். திருடிய லேப்டாப், மூன்று மொபைல் போன்களை அங்கேயே போட்டு, திருடர்கள் தப்பினர். காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



ஐதராபாத் மதுபாட்டில் விற்றவர் கைது



கொடுங்கையூர்: கொடுங்கையூர், தென்றல் நகர் பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று தென்றல் நகரிலுள்ள ஒரு வீட்டில் சோதனையிட்ட போது டிரைவரான அசோக்குமார், 27, என்பவர் மதுபாட்டில்களை விற்றது தெரிந்தது. அவரிடம் விசாரித்ததில், கொடுங்கையூர் சர்மா நகரைச் சேர்ந்த தாமஸ் என்பவரிடம் ஐதராபாத் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்றது தெரிந்தது. இவரிடமிருந்த 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.



பெண் தீக்குளித்து தற்கொலை



கொடுங்கையூர்: கொடுங்கையூர் அருள் நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 28. இவரது மனைவி கோமதி, 25. தம்பதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளன.பெருமாளுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், விரக்தியில் இருந்த கோமதி, நேற்று தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X