நடவடிக்கை எடுப்பது யார்? அரசியல் கட்சி வாகனங்களில் 'புல் பார்'கோர்ட் உத்தரவு காற்றில் பறக்குது பார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

13 ஜூன்
2021
01:36
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2021 23:01

கோவை:'ஐகோர்ட்' உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, அரசியல் கட்சியினரின் நான்கு சக்கர வாகனங்கள், 'புல் பார்' பம்பர்களை அகற்றாமல் வலம் வருகின்றன. தினமும் கண் முன் இதை கண்டும், காணாதது போல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.


மத்திய அரசு அறிவுறுத்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், கடந்தாண்டு நவ., மாதம் நான்கு சக்கர வாகனங்களில், 'புல் பார்' உள்ளிட்ட 'எக்ஸ்டிரா பிட்டிங்'களை அகற்ற, 'ஐகோர்ட்' உத்தரவிட்டது.வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது, 'புல் பார்' பம்பரால், 'ஏர் பேக்' விரிவதில் சிக்கல் ஏற்பட்டு உயிரிழப்புக்கு வழிவகுக்கின்றன.


இதையடுத்து, இந்த விஷயத்தில் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை, போக்குவரத்து துறையினர், போலீசார் தீவிரப்படுத்தினர்.வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி., வாகனங்கள் உட்பட, அனைத்து வாகனங்களிலும் 'புல் பார்' உள்ளிட்டவற்றை அகற்றுமாறு, தலைமைச் செயலர் அறிவுறுத்தியும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வாகனங்களில், இவை பெரும்பாலும் அகற்றப்படவில்லை.


தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யவும், பணிகளை வேகப்படுத்தவும், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு முதல்வர், அமைச்சர்கள் சமீபத்தில் வருகை புரிந்தனர்.அப்போது, 'புல் பார்' அகற்றாத கட்சியினரின் வாகனங்கள், வரிசையாக வலம் வந்தன.


தற்போதும், 'ஐகோர்ட்' உத்தரவை மதிக்காத கட்சியினரின் வாகனங்கள், கோவையில் வலம் வருகின்றன.ஊரடங்கு தளர்வு காரணமாக, வாகனங்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இச்சூழலில் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமான, கோர்ட் உத்தரவை பாரபட்சமின்றி நிறைவேற்றுவதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'நேர்மையான ஆட்சியை தருவோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதற்கு அரசு அதிகாரிகளின் பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பும் அவசியம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
15-ஜூன்-202105:49:33 IST Report Abuse
Siva Kumar கோர்ட் உத்தரவு எப்போதும் மக்களுக்கு மட்டுமே. திராவிஷ கட்சியினருக்கு இந்த கோர்ட் உத்தரவு எல்லாம் செல்லாது. கோர்ட்டுக்கே உத்தரவாள போடுகிறவர்கள் எங்கள் திராவிஷ கட்சி தலைவர்க.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
14-ஜூன்-202100:00:52 IST Report Abuse
Raj இவனே கேக்குறான் பேனரூம் வைக்கிறான் . ஆட்டோக்காரனை தண்டிக்க முடிந்த சட்டத்தால் ஒரு லாயரை தண்டிக்க முடியலை . வெட்கம் வெட்கம்
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
13-ஜூன்-202120:37:08 IST Report Abuse
Ram அதிகரிகள்தானே காலெக்ஷனை மந்திரிகளிடும் கொண்டு சேர்க்கிறார்கள் …. அவர்களை அடக்கமுடியுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X