சாலைகளில் பாதுகாப்பு பணி: பெண் போலீசாருக்கு விலக்கு | சென்னை செய்திகள் | Dinamalar
சாலைகளில் பாதுகாப்பு பணி: பெண் போலீசாருக்கு விலக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:45

சென்னை:சாலைகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய, வி.வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு பணியில் இருந்து, பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர், முதல்வர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் இடங்களில், உளவு மற்றும் சட்டம் -- ஒழுங்கு போலீசார், முன்னதாகவே ஆய்வு பணியில் ஈடுபடுவர். தேவைப்பட்டால் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் ஆய்வு செய்வர். போக்குவரத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.இதற்கான ஆயத்தப்பணிகள் நடக்கும் போதே, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழித்தடத்தில், சாலைகளில் வரிசையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.இப்பணியில், பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சாலைகளில் பணிபுரியும் போது, இவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. இயற்கை உபாதையை கழிக்க வசதியின்றி தவிப்பர்.தற்போது, கொரோனா பரவல் காரணமாக, பெண் போலீசாருக்கு இலகுவான பணி தான் ஒதுக்கப்படுகிறது; கர்ப்பிணி போலீசாருக்கு விடுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வி.வி.ஐ.பி., பாதுகாப்பு பணியில், வழி நெடுக பெண் போலீசார் காத்திருப்பதை தவிர்த்து, அவர்களுக்கு வேறு பணி வழங்க, காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, வி.வி.ஐ.பி.,க்கள் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து, பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் வாயிலாக, மண்டல ஐ.ஜி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X