பத்திரமா வீட்டில் இருக்குறாங்க; பத்திரப்பதிவு சரிவு! 5 நாளில் 56 ஆபீஸ்களில் 2,428 மட்டுமே பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
00:59

கோவை:பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படத் துவங்கிய பின்னும், மக்களின் தயக்கத்தால், வழக்கத்தை விட ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே பத்திரப்பதிவு நடந்து வருகிறது.கொரோனா ஊரடங்கு தளர்வில், கடந்த 7ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக, சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் பதிவுத்துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டதால், பதிவுகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, ஐந்தில் ஒரு பங்கு எண்ணிக்கையிலான பத்திரங்கள் கூட பதிவாகவில்லை.கோவை பதிவு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி மற்றும் ஊட்டி என ஐந்து பதிவு மாவட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம், 56 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.கொரோனா தாக்கத்துக்கு முன்பாக, கோவை பதிவு மாவட்டத்திலுள்ள, 17 சார்பதிவாளர் அலுவலகங்களில் சாதாரண நாட்களில் 1200லிருந்து 1500 பத்திரங்களும், முகூர்த்த நாட்களில் 2500லிருந்து 3500 பத்திரங்களும் பதிவு செய்யப்படும். இப்போது அது பெருமளவில் சரிந்துள்ளது. கடந்த ஏழாம் தேதியன்று, கோவையில் வெறும் 104 பத்திரங்கள் மட்டுமே பதிவாயின. அடுத்தடுத்த நாட்களில், 127, 268, 345 என்று உயர்ந்து, ஜூன் 11ல் 171 ஆகக்குறைந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை 93ல் துவங்கி, 120, 241, 261 என்று உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தல், ஐந்து அலுவலகங்களிலும் சேர்த்து, ஐந்து நாட்களிலும் மொத்தமாக, 66 பத்திரங்களே பதிவாகி உள்ளன. கோவை மண்டலம் முழுவதுமாக, 56 அலுவலகங்களில் கடந்த ஐந்து நாட்களிலும் சேர்த்து 2428 பத்திரங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.பதிவுத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'கொரோனா தாக்கத்தில் கோவை முதலிடத்திலும், கொங்கு மண்டலம் முன்னணியிலும் இருப்பதால், பத்திரப்பதிவில் தயக்கம் உள்ளது. பத்திரப்பதிவுக்கு, பெருவிரல் ரேகைப்பதிவு கட்டாயமாக இருந்தாலும், 'சானிடைஸ்' செய்வது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, முகக்கவசம் இல்லாதவர்களை அனுமதிக்க மறுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இயல்பான அளவில் பதிவு நடப்பதற்கு, இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X