நுாதன போலீசார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
06:14

சென்னை : 'டில்லியில், மொபைல் ஆப் வாயிலாக பண மோசடியில் ஈடுபடும் கும்பல் சிக்கியுள்ளது. இதுபோன்ற கும்பலிடம் ஏமாற வேண்டாம்' என, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.



சென்னை போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சில மாதம் முன், 'மொபைல் ஆப்' வாயிலாக, கடன் கொடுத்து, கந்துவட்டி வசூலித்த சீன நாட்டினர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.தற்போது, power bank; Telsa power bank என்ற 'மொபைல் ஆப்'களை உருவாக்கி, அதை 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி, மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோசடி கும்பலை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை தரமாட்டர். முதலீடு செய்த பணத்திற்கு, 20 நாட்களில் இரண்டு மடங்காக திருப்பி தரப்படும் என, அறிவிப்பர். அத்துடன், மணி கணக்கு, நாள் கணக்கு முதலீடு செய்தால், உடனடியாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை காட்டுவர்.'கூகுல்பே; போன்பே; பேடிஎம்' வாயிலாக பணம் கட்டச் சொல்வர். அந்த பணத்திற்கு சிறிய தொகையை உடனடியாக அளிப்பர். இதனால், முதலீடு செய்பவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவர்.



பின், மோசடி செய்து ஓட்டம் பிடித்துவிடுவர்.சென்னையில், power bank என்ற மொபைல் ஆப் வாயிலாக, பணத்தை பறிகொடுத்தோர், 34 பேர் புகார் அளித்துள்ளனர். அதேபோல, Tesla power bank என்ற மொபைல் ஆப் வாயிலாக, மூன்று பேர் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக, வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறோம்.பொதுமக்கள், நுாதன மோசடி கும்பலிடம் ஏமாந்து பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X