துாங்கா நகரமாக மாறுமா சென்னை?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
22:03

சர்வதேச நகரங்கள் போன்று சென்னையிலும், வணிக பொருளாதார சேவைகள் 24 மணி நேரமும் இயங்க, சி.எம்.டி.ஏ.,வின் மூன்றாவது மாஸ்டர் பிளானில் உரிய பகுதிகளை சேர்க்க வேண்டும் என, நகரமைப்பு மற்றும் தொழில் துறை வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சமூக பொருளாதார ரீதியாக பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.முதலீட்டு நிலையிலும், தொழில், வணிக நிறுவனங்கள் பெரிய அளவில் இழப்புகளை சந்தித்துள்ளன. கொரோனா மற்றும் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பும்போது, இந்த இழப்புகளை சரிசெய்யும் வகையில், புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.சர்வதேச நகரங்களில், சுற்றுலா பயணியரை கவர ஷாப்பிங் மால்கள், திரை அரங்குகள், உணவகங்கள் போன்றவை 24 மணி நேரமும் செயல்படும்.



இதன் அடிப்படையில், இரவு நேர பொருளாதாரம் என்ற அம்சம் அங்கு வளர்ந்து வருகிறது. டில்லியில் புதிய முயற்சிஅந்த வகையில், டில்லி வளர்ச்சி குழுமமான டி.டி.ஏ., 2041 வரையிலான ஆண்டுகளுக்கு, புதிய வரைவு மாஸ்டர் பிளானை சமீபத்தில் வெளியிட்டது. அதில், டில்லியில் இரவு நேர பொருளாதார வளர்ச்சியை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்காக, குறிப்பிட்ட சில பகுதிகள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.அதேபோல், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டம் காலாவதியாகி உள்ளது.



இதையடுத்து, மூன்றாவது முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணிகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.இதில், டில்லியை போன்று, இரவு நேர பொருளாதார வளர்ச்சியின் பயனை பெற உரிய வழிமுறைகளை சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதனால் சென்னையும் 24 மணி நேரமும் செயல்படும் துாங்கா நகரமாகும். முழுமை திட்ட நிலையில் இருந்து இதற்கான பணிகளை துவங்குவதால், திட்டமிட்ட முறையில் இதற்கான வழிபிறக்கும். மும்பை முன்மாதிரிநம் நாட்டில், மும்பை, பெங்களூரில் இரவு நேர வணிக செயல்பாடுகளுக்கு அனுமதி உள்ளது. அது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த முன்மாதிரிகள் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., மூன்றாவது மாஸ்டர் பிளானில் இதற்கான வழிமுறைகள் சேர்க்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஆய்வு அவசியம்இது குறித்து தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:சர்வதேச நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் 24 மணி நேரமும் செயல்படு கின்றன. குறிப்பாக, சுற்றுலா சார்ந்த பகுதிகளில் தான், இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. சென்னையில் ஐ.டி., துறை வளர்ச்சி உச்சத்தில் இருந்த போது, அவை 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்படுவதை பார்த்து இருக்கிறோம். அவை செயல்படும் போது, அது சார்ந்த பிற துறைகளும் 24 மணி நேரம் செயல்பட வேண்டிய அவசியம் எழுகிறது.எந்த பகுதியில், என்ன வகையான வர்த்தகம், யாருக்காக 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பதை வரையறுப்பதில், துல்லியமான ஆய்வு தேவை. சோதனை முறையில் சில இடங்களை, முதலில் இதற்கு பயன்படுத்தி பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.



சென்னையில் தி.நகர், பிராட்வே, அண்ணா சாலை, புரசைவாக்கம், அண்ணா நகர், அடையாறு, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, வேளச்சேரி போன்ற பிரதான வணிக பகுதிகளில் கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இப்பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம். இதனால் கூட்ட நெரிசல் குறையும். மக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் கடைகளுக்கு செல்வர். உதாரணமாக, பகலில் 20 பேர் வேலை செய்யும் ஒரு இடத்தில், இரவு நேரத்தில், கூடுதலாக, 10 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.



பாலமுருகன், ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் அரசின் நிலைப்பாடு என்ன?மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் 2016ல், கடைகள், நிறுவனங்கள் ஒழுங்குமுறை மாதிரி சட்டத்தை உருவாக்கியது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் இது மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது.இதன் அடிப்படையில், தமிழக அரசு, கடைகள், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் திறந்து இருக்க அனுமதித்து, 2019 மே 28ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை அமல்படுத்துவதில் அதிகாரிகள் மவுனமாக இருக்கின்றனர்.இந்த அரசாணை யில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் விபரம்: ஒவ்வொரு பணியாளர்களுக்கும் சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும் மாநில ஷாப்ஸ் அண்ட் எஷ்டாபிளிஸ் மென்ட் விதிமுறைப்படி பணியாளர்களின் விபரங்களை, அனைவரது பார்வையிலும் படும்படி வைக்க வேண்டும்



ஒரு பணியாளரை, ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும்; கூடுதல் நேரம் வேலை பார்த்தால், அதற்கான ஊதியத்தையும் வழங்க வேண்டும் பெண் பணியாளர்களை இரவு 8:00 மணிக்கு மேல் பணியில் அமர்த்தக் கூடாது; வேண்டுமெனில் அவர்களது எழுத்துப்பூர்வ சம்மதத்துடன் 8:00 மணிக்கு மேல் பணியில் அமர்த்தலாம் இரவு 8:00 மணிக்கு மேல், காலை 6:00 மணி வரை பணிக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, கழிப்பறை, ஓய்வறை என, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும்இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X