சில வரி செய்தி//
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
22:04

பிரபல ரவுடி கைதுசென்னை: சென்னை, பாரிமுனை, பி.ஆர்.என்., தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர், 'காக்கா தோப்பு' பாலாஜி, 41. இவர் மீது, கொலை, ஆள்கடத்தில் உட்பட, 50 குற்ற வழக்குகள் உள்ளன. ஏற்கனவே, 12 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தவர், குற்ற வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், விழுப்புரத்தில் பதுங்கியிருந்த அவரை, போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசாரிடமிருந்து தப்ப முயன்றதால், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து, பாலாஜி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.குழந்தைகளுடன் பெண் மீட்புபெரவள்ளூர்: பெரவள்ளூர், ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன், 37; இவரது மனைவி ஜெசிஜெனிபர், 30. இருவரும், 2015ம் ஆண்டு, காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த, 10ம் தேதி மதியம், ஜெசிஜெனிபர், தன் குழந்தைகளுடன் காணாமல் போனார். அவர்களை, பல இடங்களில் தேடிய முரளி கிருஷ்ணன், 11ம் தேதி, பெரவள்ளூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், ஜெசிஜெனிபர், தன் குழந்தைகளுடன் நேற்று மதியம், பெரவள்ளூர் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கன்டெய்னரில் மதுபானம் கடத்தல்மணலி: திருவொற்றியூர், மணலி விரைவு சாலை, எம்.எப்.எல்., சந்திப்பு அருகே, நேற்று முன்தினம் இரவு, மாதவரம் துணை கமிஷனர் தனிப்படை போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், வெகு நேரமாக நின்றிருந்த கார் மற்றும் கன்டெய்னர் லாரி ஓட்டுனர்களிடம் விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, கன்டெய்னர் லாரியை சோதனையிட்டனர். அதில், 45 வெளி மதுபாட்டில்கள் சிக்கின. இது தொடர்பாக, கன்டெய்னர் லாரி ஓட்டுனரான, திருப்பத்துாரைச் சேர்ந்த சத்யராஜ், 33, மற்றும், எண்ணுார், சக்திபுரத்தைச் சேர்ந்த ஏசுதாஸ், 27, ராம்குமார், 27, ஆகிய மூவரையும் கைது செய்தனர். கார் மற்றும் கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டன.17 வயது சிறுமி மாயம்கோயம்பேடு: அண்ணா நகரைச் சேர்ந்தவர், 17 வயது பிளஸ் 2 மாணவி. கடந்த, 10ம் தேதி, கோயம்பேடில் உள்ள சித்தி வீட்டிற்கு சிறுமியை, அதன் பின் காணவில்லை. இது குறித்து, அவரது தந்தை, நேற்று கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், வாலிபர் ஒருவருடன், சிறுமி அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்தது தெரிந்தது. சம்பவத்தன்று, வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் சிறுமி ஏறி சென்றதை, அவரது சித்தப்பா பார்த்ததாக, விசாரணையில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியை அழைத்து சென்ற வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவுகாசிமேடு: இந்தாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்., 15ம் தேதி துவங்கி, இன்று நள்ளிரவு முடிய உள்ளது. 61 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து, இன்று நள்ளிரவில் மீனவர்கள், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வர். இதற்காக, படகில் 'ஐஸ்' கட்டிகளை நிரப்பினர். தங்களுக்கு வேண்டிய தண்ணீர், உணவு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்களையும் எடுத்து வைத்தனர்.'ஜிம்' பயிற்சியாளர் மீது புகார்சேலையூர்: கிழக்கு தாம்பரத்தில், பெண்ணிடம் அத்துமீறிய, 'ஜிம்' பயிற்சியாளர் மீது, 27 வயது பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆன்லைனில் அளிக்கப்பட்ட புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலையூர் உதவி கமிஷனர், விஸ்வேஸ்வரய்யாவிடம் கேட்டபோது, ''பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகார், நேற்று முன்தினம் இரவு பெறப்பட்டுள்ளது. அதில், சம்பவம் பற்றி, தெளிவாக குறிப்பிடப்படாததால், வழக்கு பதிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்தபோது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளதாக கூறினார். எனினும், தொடர்ந்து விசாரிக்கிறோம்,'' என்றார்.கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்புசென்னை: சென்னை, பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார், ஐந்து தனிப்படை அமைத்து பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் யாரேனும் காய்ச்சுகிறார்களா என ஆய்வு செய்தனர். இதில், மலையம்பாக்கம் காட்டுப்பகுதியில், ஐந்து இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக, ஊறல்கள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று அவற்றை அழித்த போலீசார், சாராய ஊரல்கள் போட்டவர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X