நடவடிக்கை! சுருங்கி வரும் புழல் ஏரி பரப்பளவு ....அரசு துறை அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 ஜூன்
2021
07:10
பதிவு செய்த நாள்
ஜூன் 13,2021 23:10

அம்பத்துார் : அரசு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புழல் ஏரியில், கடந்தாண்டு முதல், மேலும் பல புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகி உள்ளன.



சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, 32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. இந்த ஏரியின் பல ஏக்கர் பரப்பு தனியார் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதனால், மழைக்காலத்தில் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மாயமாகி விட்டன.மின் இணைப்புஇதனால், ஆண்டுதோறும் பருவ மழையின் போது, ஏரிக்கு கிடைக்கும் நீரை சேமிக்க வழியின்றி, நவம்பர், டிசம்பரில், புழல் ஏரியில் இருந்து, 1 டி.எம்.சி., நீர் வரை உபரிநீர் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு, வீணாக கடலுக்கு செல்கிறது.இந்த நிலை, 2015ம் ஆண்டு முதல் தொடர்கிறது.



ஆனாலும், பொதுப்பணித் துறையினர், சட்டரீதியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், மாநகராட்சியின், 24வது வார்டுக்குட்பட்ட, சண்முகபுரம் அருகே, கடந்தாண்டு முதல், புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகி உள்ளன.கொரோனா ஊரடங்கு, சட்டசபை தேர்தல் போன்ற பணி காரணமாக, அரசு அதிகாரிகளும் புதிய ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், சமூக விரோதிகளால் குப்பை மற்றும் கட்டட கழிவுகள் ஏரிக்குள் கொட்டப்பட்டு, அதில், 600 சதுர அடி வீதம், வீட்டு மனைக்கான, நில அளவை கல் நடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.



அவை, 3 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. சொந்த வீடு கனவில் உள்ள அப்பாவிகள், உரிய ஆவணங்கள் இல்லாத நிலையிலும், அவற்றை வாங்கி, வீடுகளை கட்டி உள்ளனர். அவற்றுக்கு, இடைத்தரகர் மூலம், அந்த பகுதி மின் வாரியத்தினர், மின் இணைப்பும் வழங்கி உள்ளனர். நடவடிக்கைசமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என, நீதிமன்றமும், அரசும் வலியுறுத்தியும், பொதுப்பணி, வருவாய், உள்ளாட்சி மற்றும் மின் வாரியத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை கண்டுக்கொள்வதில்லை.அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், புழல் ஏரிக்குள் பாய்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X