அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற தி.மு.க.,வினர் ‛நையப்புடைத்து விரட்டியடித்த பெண்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
23:14

சென்னை : சென்னை, கல்லுக்குட்டை பகுதியை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்ற தி.மு.க.,வினரை, அப்பகுதி பெண்கள், துடைப்பம், விறகு கட்டையால் சரமாரியாக தாக்கி விரட்டியடித்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



துரைப்பாக்கம், கல்லுக்குட்டையில் உள்ள அரசு இடத்தில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நீர்நிலையான இங்குள்ள காலி இடங்களை, அ.தி.மு.க.,வை சேர்ந்த சிலர் வளைத்து போட்டு, 2 - 5 லட்சம் ரூபாய் விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சோழிங்கநல்லுாரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின் தி.மு.க.,வினர் அதேபோல் இடங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.அதே பகுதி திருவள்ளுவர் நகரில் உள்ள சில இடங்களை, போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்துள்ளனர்.



நேற்று முன்தினம், தி.மு.க.,வை சேர்ந்த சிலர், இடத்தின் முகப்பில் இருந்த குடிநீர் தொட்டியை அகற்றி, இடத்தை பாதுகாக்க, சுற்றி வேலி அமைக்க முயன்றுஉள்ளனர்.தகவலின் படி, துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அப்பகுதி பெண்கள், போலீசார் கண்முன்னே, ஆக்கிரமிக்க வந்த நபர்களை விறகு கட்டை, துடைப்பம் கொண்டு சரமாரியாக தாக்கினர். பின், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார், அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற ரமேஷ்மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா உள்ளிட்டோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அப்பகுதி பெண்கள், ஆக்கிரமிப்பாளர்களை சரமாரியாக தாக்கிய காட்சி, சமூகவலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X