விழுப்புரத்தில் 304 பேருக்கு தொற்று | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரத்தில் 304 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
23:15

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 40,037 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இவர்களில், 307 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 3,388 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு 40,341 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோயில் இருந்து 36,645 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த திண்டிவனம் அடுத்த கொள்ளாரை சேர்ந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X