கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 50 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
23:17

விழுப்பும் : 'கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது; இதனால், நோய் பரவும் என்று அச்சப்பட தேவையில்லை' என, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கூறினார்.



விழுப்புரத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 961 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 538 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கே.எம்.சி., மருத்துவமனையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இதில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.



கடந்த வாரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் போலீஸ்காரர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் உள்ளது. இந்நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க 30,000 மருந்துகள் கேட்டு தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், 10,000 மருந்துகள் வந்துள்ளது.தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால், இரண்டு மடங்கு மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும். திண்டிவனத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.



இதனால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் தேவையில்லை. கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒரு மருத்துவ வல்லுநர் கூறியுள்ளார். ஆனாலும், அனைத்து மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ வார்டு திறக்கப்பட்டுள்ளது.கொரோனா தாக்கம் குறைந்தாலும் இந்த மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்படாமல், தொடர்ந்து இயங்கும்.இவ்வாறு, அமைச்சர் கூறினார். உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X