காரில் வந்து ஆடு திருடிய 'பலே' தம்பதி கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2021
23:19

கொரட்டூர் : காரில் வந்து ஆடு, கோழிகளைத் திருடி, இறைச்சி கடைகளுக்கு விற்ற, தம்பதி கைதாகினர்.



சென்னை, கொரட்டூர் போத்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா, 56. கடந்த ௩௦ம் தேதி, அதிகாலை 4:00 மணியளவில் இவர் வளர்த்து வந்த இரு வெள்ளாடுகளை, காரில் வந்த பெண் உட்பட இருவர் திருடி, தப்பினர்.மேலும் இவர்கள், கொரட்டூர் பாடி, ஜகதாம்பிகை நகரில், பூபாலன், 37, என்பவரது கோழி இறைச்சி கடையில் 12 நாட்டு கோழிகளை, கூண்டோடு திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த, கொரட்டூர் போலீசார், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சுந்தர் நகரை சேர்ந்த அஷ்ரப், 38, அவரது மனைவி லட்சுமி, 35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.விசாரணையில் இவர்கள், காரில் வலம் வந்து, ஆடு, கோழிகளை திருடி, இறைச்சி கடைகளுக்கு விற்று வந்தது தெரிந்தது. காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X