டிஷ்யூம்...டிஷ்யூம்...! தொடர் ஊரடங்கால் குடும்பங்களில்...ஐந்து மாதங்களில் 142 புகார்கள் பதிவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 ஜூன்
2021
02:33
பதிவு செய்த நாள்
ஜூன் 14,2021 00:35

கோவை:கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதார நெருக்கடி, மன அழுத்தம் காரணமாக சில குடும்பங்களில், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவை மாவட்ட சமூக நலத்துறையில் மே இறுதி வரை, 142 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



கடந்த 2020 மார்ச் மாதம் முதலே ஊரடங்கு காரணமாக, அனைத்து தரப்பினரும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். வேலையிழப்பு, ஊதியம் குறைவு, மருத்துவமனை செலவு, வீடுகளுக்குள் முடக்கம் என ஒவ்வொருவரும், பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு, குடும்ப உறவுகளில் வன்முறை சம்பவங்களாக வெடிக்கின்றன. மாவட்ட அளவில் சமூகநலத்துறையின் கீழ், குடும்ப வன்முறை சம்பவங்களை விசாரிக்கவும், ஆலோசனை வழங்கி, சிக்கல்களின் தீவிரத்தை பொறுத்து நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யவும், சமூகநலத்துறையின் கீழ், ஓர் பிரிவு செயல்பட்டு வருகிறது.




ஐந்து மாதங்களில் 142 புகார்!


இப்பிரிவின் கீழ், ஜன., மாதம் 40, பிப்., 53, மார்ச் 20, ஏப்., 22,மே மாதம் 7 என, 142 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரச்னைகளை, அதிகாரிகள் போன் வழியாக விசாரித்து, தீர்வை வழங்குகின்றனர். பெரிதளவில் உள்ள சிக்கல்களை, நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் பரிந்துரை செய்கின்றனர்.இது தவிர, பெண்கள் பாதுகாப்பு பிரிவான, 'ஒன் ஸ்டாப் சென்டர்' (181), காவல்துறையிலும் புகார் பதிவு செய்யப்படுகின்றன.



இதுகுறித்து, மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படும், குடும்ப வன்முறை தடுப்பு பிரிவு அலுவலர் அருணாதேவி கூறியதாவது:ஊரடங்கு, அனைத்து தரப்பினருக்கும் ஓர் மனஅழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கடுமையான சூழலில், சிக்கல்கள் வருவது சாதாரணமானது. இப்புரிதல் இல்லாத வீடுகளில், வன்முறை வெடிக்கிறது.பள்ளிகள் மூடப்பட்டும், வெளியிடங்களுக்கு செல்ல முடியாமலும் வீட்டுக்குள் முடங்கியுள்ள குழந்தைகளே, பெற்றோரின் ரகளையால், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


கோவையில் இதுவரை, 142 குடும்ப வன்முறை புகார்கள் பதிவாகியுள்ளன. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், 181/ 9750763260 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். அருகில் உள்ள காவல்நிலையங்களிலும், புகார் அளிக்கலாம்.தற்போதைய சூழலை உணர்ந்து, வீட்டிற்கு வெளியில் சென்றோ, அல்லது அமைதியாக எதிர் தரப்பினரை கண்டுகொள்ளாமல் ஒதுங்கியோ, தம்பதியர் பெரிய சிக்கல்களை தவிர்க்கலாம். இது, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.


'கடந்த ஆண்டை விட குறைவு'


கோவை மாநகர சட்டம் ஒழுங்கு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆண்டை காட்டிலும், தற்போதைய ஊரடங்கில் புகார்கள் சற்று குறைவாகத்தான் உள்ளது. புகார்கள் இல்லை என்று கூறிவிடமுடியாது. போலீசார் தரப்பில் மகளிர் காவல்நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், உளவியல் ரீதியாகவும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், தயங்காமல் புகார் அளிக்கலாம்' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X