நோயை வெற்றிக்கொள்ள பயத்தை துாக்கி வீசுங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
00:38

கோவை:கொரோனா தொற்றை, உலகின் பெருந்துயரம் என்று சொல்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தொடரும் இந்த நோய் பரவலால், மக்கள் உயிர் பயத்தில் உறைந்து போய் உள்ளனர். நோயில் இருந்து மீண்டவர்கள், எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ளனர்.''இந்த நோயை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், முதலில் நோய் பயத்தை துாக்கி வீசுங்கள்,'' என்கிறார், அரசு மனநல மருத்துவர் நிபுணர் ஹெலினா செல்வக்கொடி.இந்த நோய் காலத்தை, எப்படி தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து, அவர் வழங்கிய ஆலோசனைகள் இதோ...!n இந்த நோய் காலத்தில் கொரோனாவுக்கு எதிராக, நாம் காட்டும் எதிர்வினை, அந்த நோய் குறித்த பயம்தான். பயத்துக்கு நம் மனதில் இடம் கொடுத்து விட்டால், அது நம்மை ஆள துவங்கிவிடும். அதனால் முதலில் பயத்தை துாக்கி வீச வேண்டும். பயம் இருப்பதால்தான், ஒரு கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், ஆறு அறிவு படைத்த மனிதனை ஆட்டிப்படைக்கிறது.n இந்த பயத்தை நாம் எப்படி வெற்றி கொள்ள வேண்டும் என்றால், முதலில் அந்த பயத்தை எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.n இரண்டாவது, அந்த பயத்தை புறக்கணிக்க பழகிக்கொள்ள வேண்டும். மூன்றாவது, அந்த பயத்தை உருவாக்கும் அல்லது அதிகரிக்கும் சக்திகளிடமிருந்து, நாம் தள்ளி இருக்கவேண்டும்.n குறிப்பாக, கொரோனா குறித்த செய்திகள், வாட்ஸ்ஆப்பில் வரும் வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து வரும் வதந்திகளை, புறந்தள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து தள்ளி இருந்தாலே போதும். நமக்குள் நேர்மறை எண்ணங்கள் வளர்ந்து விடும்.n ஒவ்வொரு நாளும் நாம் இயற்கையிடமும், கடவுளிடமும் நல்ல உடல் நலத்தோடு இருப்பதாக நன்றி கூற வேண்டும். எந்த ஒரு துயரமாக இருந்தாலும், முதலில் அதை ஏற்றுக் கொள்ளுதல் (Acceptability) வேண்டும். அப்போதுதான் நம்மால் (Adoptability) அதோடு பொருந்தி கொள்ள முடியும்.n அந்த சூழ்நிலைக்கு ஏற்ப பொருந்தி கொண்டால்தான், எதிர்மறையான துன்பத்தை நேர்மறையாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த நிலைக்கு பிறகுதான் தன்னம்பிக்கையும், தைரியமும் உருவாகும்.n மனதில் உற்சாகம் ஏற்படுத்தும் தியானம் செய்தல், இசை கேட்டல், நடனமாடுதல், விளையாடுதல் மற்றும் மனதுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபடலாம். எல்லாவற்றையும் விட, 'இதுவும் கடந்து போகும்' என்ற எண்ணம், மேலே எழும் வரும் போது, மனது லேசாகி விடும். இந்த வாழ்க்கை இனிமையாகி விடும்.அதிக இதய துடிப்பு ஏற்படுவது ஏன்?டாக்டர் ெஹலினா செல்வக்கொடி கூறுகையில், ''மருத்துவ அறிஞர் ஹான்ஸ் செல்லி, பொது தகவமைப்பு நோயியம் (General Adaptation Syndrom) என்ற கோட்பாட்டின் மூலம் மன அழுத்தம், எச்சரிக்கை எதிர்வினை (Alarm reaction), எதிர்த்தல் (Resistennce), முழுச்சோர்வு (Exhaution) ஆகிய மூன்று விதமாக வெளிப்படும். இதில் மூன்றாம் கட்டத்தை நாம் அனுபவிக்கும் போது, நம்மால் இயல்பான செயல்பாடுகளை செய்ய முடியாமல் போய் விடும். இதனால் தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nerous system) பாதிக்கப்பட்டு, அதிக இதய துடிப்பு, அதிக வியர்வை மற்றும் ரத்த ஓட்டக்குறை நோய் (Ischemia) ஏற்பட்டு, உடலுக்கு நிரந்தர தொல்லைகள் ஏற்படும்,'' என்கிறார்.மருத்துவ ஆலோசனைஎப்போது தேவை?பெற்றோர்கள், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவோ, மற்றவர் மூலமாகவோ ஏதேனும் குழந்தைகளுக்கு பிரச்னைகள் உள்ளதா என்பதை, கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தனிமையாக இருந்தாலும், கோபம், கவலை, அழுகை, பிடிவாதம் போன்ற அறிகுறிகளுடன் இருந்தாலும், பெரியவர்கள் பதட்டம், மனச்சோர்வு, படபடப்பு, தூக்கமின்மை, கோபம், தாழ்வு மனப்பான்மை போன்ற அறிகுறிகளுடன் இருந்தாலும், மனநலமருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X