கர்நாடக மாநில மது விற்றவர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கர்நாடக மாநில மது விற்றவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
00:50

வடவள்ளி:வேடபட்டியில், சட்டவிரோதமாக கர்நாடகா மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ.,சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேடபட்டி மயானம் அருகில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, கர்நாடக மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. மது விற்பனையில் ஈடுபட்டிருந்த வேடபட்டியை சேர்ந்த பார்த்திபன், 27 என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 18 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X