கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
01:03

கோவை:கோவையில், கடந்த இரு நாட்களாக, கொரோனா தொற்று பாதிப்பு, 500க்கு கீழ் குறைந்திருக்கிறது. தொற்று போய் விட்டதாக நினைக்காமல், முக கவசம் அணிவது; சமூக இடைவெளி பின்பற்றுவதை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்த, மே, 26ல், கோவையில் உச்சத்துக்குச் சென்ற கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால், தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.நேற்று முன்தினம், 496 ஆக இருந்த பாதிப்பு, நேற்று, 483 என குறைந்தது. இரு நாட்களாக, 500க்கு கீழ் பாதிப்பு சென்றிருப்பதால், படிப்படியாக குறையும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:கோவை மாநகராட்சி பகுதியில், 4,500 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, ஒவ்வொருவரையும் பரிசோதிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில், மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.நாளொன்றுக்கு, 6,500 சளி மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இரு நாட்களாக, 500க்கும் கீழாகவே பாதிப்பு உறுதியாகிறது. தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தொற்று, போய் விட்டதாக எண்ணக்கூடாது. முதல் அலையை கட்டுக்குள் கொண்டு வந்தபோது, அலட்சியமாக இருந்ததால், இரண்டாவது அலையை சந்தித்து, மிகப்பெரிய பாதிப்பை அனுபவித்தோம். அத்தகைய இழப்பு மீண்டும் வரக்கூடாது.கொரோனா இல்லாத கோவையை உருவாக்க, முகக்கவசம் அணிவது; சானிடைசர் பயன்படுத்துவது; சமூக இடைவெளி பின்பற்றுவதை, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X