மக்களின் வலி உணர்ந்த கலெக்டர்! திடீர் மாற்றம்; கோவை மக்கள் ஏமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
01:30

கோவை:கோவை கலெக்டராக நாகராஜன், 81 நாட்களே பணியாற்றியுள்ளபோதிலும், தமது துணிச்சலான நடவடிக்கைகளால் மக்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்த காலத்தில் தேர்தல் ஆணையத்தால் கோவை கலெக்டராக நியமிக்கப்பட்டவர் நாகராஜன். இவர், 'சிவில் சர்வீசஸ் தேர்வில்' தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தவர். அரசியல் சார்பு உள்ளிட்ட எந்த ஒரு புகாருக்கும் உள்ளாகாதவர் என்பதால், தேர்தல் ஆணையம் இவரை, கோவை கலெக்டராக நியமித்தது.அதன்படியே, சட்டசபை தேர்தலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வராத வகையில் திறம்பட நடத்தி முடித்தார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு விஷயத்தில் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டார். தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார் வந்ததும் சிறப்பு குழு நியமித்து விசாரித்தார். இரு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதித்தார். பிரபலமான இரு மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பச் செய்தார்.ஆம்புலன்ஸில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை தொடர்ந்து, இலவச சேவை உருவாக்கினார். அரசு மருத்துவமனையில் உயிர் பலி அதிகரித்ததை தொடர்ந்து, இரவு நேரத்தில் அங்கு சென்ற நாகராஜன் நடைபாதையில் மணிக்கணக்கில் அமர்ந்து நோயாளிகளின் உறவினர்களிடம் குறை கேட்டார்.வனப்பகுதி விஸ்தரிப்புதமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் வருவாய் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான, 2,593 ஏக்கர் நிலங்களை, வன நிலங்களாக அறிவித்தார். அதேபோல, 1949-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் நிலங்கள் பேணுகை சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட, மாநிலத்தின் முதல் யானைகள் வலசைப்பாதையான, கல்லார் வலசை பாதையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தார். அதன்படி, வனத்துக்கு நடுவே அமைந்திருக்கும், 125 ஏக்கர் தனியார் நிலங்களைத் தனியார் வனமாக அறிவித்து உத்தரவிட்டார். இது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.தடாகம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு, 'சீல்' வைக்கப்பட்ட செங்கல் சூளைகளில், செங்கற்களை எடுத்துச் செல்ல, பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்தபோதிலும், அதற்கு செவிசாய்க்காமல் இருந்தார். இரவு நேரத்தில், செங்கற்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றதாக புகார் வந்தது தொடர்பாக, விசாரித்து வந்தார். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு முன், நில நிர்வாக ஆணையராக நேற்று மாற்றப்பட்டார்; இது, பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. 81 நாட்களே கோவையில் கலெக்டராக, நாகராஜன் பணியாற்றி இருந்தாலும், தனது பணிக்காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் என, பலரும் பாராட்டுகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X