தரை , மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு அவசியமே! கடும் வெயிலால் நோய் தொற்று பரவ வாய்ப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தரை , மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு அவசியமே! கடும் வெயிலால் நோய் தொற்று பரவ வாய்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
05:04

நரிக்குடி : விருதுநகர் மாவட்டத்தில் வெயில் கடுமையாக தாக்கி வருவதால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதையடுத்து தரை தள, மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளை பராமரிப்பது அவசியமாகிறது.



மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தரைதளம், மேல்நிலை தொட்டியில் நீரை சேமித்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வதோடு,எப்போது சுத்தம் செய்யபப்ட்டது என்ற தகவலையும் குறிப்பிட வேண்டும். ஆனால் பெரும்பாலான தொட்டிகளில் இத்தகவல் இருப்பதில்லை. சுத்தம் செய்தே ஆண்டுகள் பல கடந்திருக்கும்.



தற்போது கொரோனா ஊரடங்கால் மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் அதிகளவில் குடிநீர் தேவைப்படுகிறது. தரை தளம், மேல் நிலை தொட்டி சுத்தமின்றி சப்ளையாகும் குடிநீர் மூலம் பல்வேறு நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. அத்துடன் வெயிலும் வாட்டி வதைப்பதால் வயிற்றுப் போக்கு, சரும நோய்கள் உருவாகும் நிலை உள்ளது. இதை தடுக்க குடிநீர் தொட்டிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே. இதை உள்ளாட்சி நிர்வாகம் முறையாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்....................



நடவடிக்கை எடுக்கலாம்



கொரோனாவால் மக்கள் படும் இன்னல்கள் சொல்லிமாலாது. தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் குடிநீர் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து நோய் தொற்று வராமல் தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்.மாரீஸ் கண்ணன், சமூக ஆர்வலர், நரிக்குடி....................

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X