கொள்ளளவை நெருங்கிய மருதாநதி அணை நீர்மட்டம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
கொள்ளளவை நெருங்கிய மருதாநதி அணை நீர்மட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
05:30

பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி அணையின் கொள்ளளவு 72 அடியை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்படுகிறது.



மருதாநதி அணையின் மொத்த உயரம் 74 அடி. பண்ணைக்காடு, தாண்டிக்குடி மலைப் பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு வரத்து ஏற்பட்டு நீர் மட்டம் 72 அடியானது. தற்போது அணைக்கு வரத்து 60 கன அடியாக உள்ளது.உதவி பொறியாளர் மோகன்தாஸ் கூறுகையில்,'' தொடர்மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரை கண்மாய்களுக்கு திறந்துவிட்டு உள்ளோம்" என்றார்.இதேபோல் ஆத்தூர் ராஜவாய்க்கால் பகுதியில் பெரியாற்றில் நீர்வரத்து ஏற்பட்டு சித்தரேவு புளியங்குளம், ஏந்தல் கண்மாய்கள் நிரம்பி வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X