செய்தி சில வரிகளில்..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
05:33

கலெக்டர் ஆய்வு



நத்தம்: கோவில்பட்டி, மூங்கில்பட்டியில் கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் ராஜா, வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, செயல் அலுவலர் சரவணக்குமார் உடனிருந்தனர்.



நிர்வாகி கைது



திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே சில்வார்பட்டி ஜெகதீசன் 36, ஹிந்து மக்கள் கட்சி மாநில இணைச் செயலாளர். இவர் திருமணம்பட்டியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். அங்கு நண்பரின் 19 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்பெண்ணின் பெற்றோர் புகாரில், நேற்று ஜெகதீசனை போலீசார் கைது செய்தனர்.



நுாதன ஆர்ப்பாட்டம்



நத்தம்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராணி, பாலாஜி, தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். இதில்,டூவீலருக்கு மாலை அணிவித்து, பாடையில் ஏற்றி இறுதி அஞ்சலி செலுத்துவது போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.



ஒருவர் கைது



திண்டுக்கல்: மைசூர்-துாத்துக்குடி ரயிலில் மதுபாட்டில் கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை ரயில் திண்டுக்கல் வந்ததும் சோதனை செய்ததில் தென்காசியை சேர்ந்த மைக்கேல் ராபின்சன் 22, மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.



ஆர்ப்பாட்டம்



திண்டுக்கல்: தலித் கிறிஸ்தவ இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் அமைப்பாளர் ஜான்போஸ்கோ தலைமை வகித்தார். வி.சி.க., நகரச் செயலாளர் ஆனந்த்ராஜ் முன்னிலை வகித்தார். இதில், 'தலித் கிறிஸ்தவ குருமார்களை திருச்சி, வேலுார், சிவகங்கை, குழித்துறை, புதுச்சேரியில் மறை மாவட்டங்களின் ஆயர்களாக நியமிக்க வேண்டும்' உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



தடுப்பூசி முகாம்



திண்டுக்கல்:- பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் நடந்த முகாமில் ஊராட்சி தலைவர் ரேவதி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் மலரவன், காமராஜ் முன்னிலை வகித்தனர். டாக்டர் சீனிவாசன் உட்பட சுகாதாரத் துறையினர் பங்கேற்றனர். இதில் 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.



39 பேர் மீது வழக்கு



வடமதுரை: வெள்ளபொம்மன்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊரடங்கு நேரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக, வட்டார தலைவர் ராஜரத்தினம், நகர தலைவர் அனந்தவெங்கடேசன் உட்பட 39 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.



மார்க்கெட் ரோடு சேதம்



ஒட்டன்சத்திரம்: நகராட்சி பஸ்ஸ்டாண்ட் எதிரே காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இதன் கிழக்கு நுழைவு வாயில் பகுதி, வட கிழக்கு நுழைவு பகுதி மற்றும் மார்க்கெட்டிற்குள் பல இடங்களில் ரோடு மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனங்களை இயக்குவது சிரமமாக உள்ளது. டூவீலரில் விளை பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X