அடகு வைத்த நகை கைக்கு வராமல் விவசாயிகள் தவிப்பு! | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
அடகு வைத்த நகை கைக்கு வராமல் விவசாயிகள் தவிப்பு!
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
05:34

குஜிலியம்பாறை : 'பயிர் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்னும் அடகு வைத்த நகை கைக்கு வரவில்லை' என, விவசாயிகள் புலம்பி தவிக்கின்றனர்.



மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பலர் நகைகளை அடகு வைத்து பயிர் மற்றும் நகை கடன் பெற்றனர்.2021 ஜன.31 ல் அ.தி.மு.க., ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி, கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்று வழங்கினர்.



இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பல கூட்டுறவு சங்கங்களில் அடகு வைத்த நகைளை திரும்ப வழங்கி வருகின்றனர். ஆனால், குஜிலியம்பாறை, ஆர்.புதுக்கோட்டை, சி.அம்மாபட்டி, லந்தகோட்டை, பாளையம் உட்பட பல கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ஏனோ இன்னும் நகைகளை திரும்ப வழங்கவில்லை.



விவசாயிகளுக்கு சேர வேண்டிய நகைகளை திரும்ப கொடுத்தால், கொரோனா காலத்தில் வேறொரு பக்கம் அடகு வைத்து பிழைப்பு நடத்த முடியும். நகைகளை திரும்ப வழங்க மாவட்ட நிர்வாம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X