சிறுமி கர்ப்பம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
சிறுமி கர்ப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
06:19

மரக்காணம் : மரக்காணம் அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.



விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி மகன் முத்தரசன் (எ) ரமேஷ், 26; ஜே.சி.பி., டிரைவர். இவர், 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியானார்.இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார்' போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து, முத்தரசனை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X