கடைகளின் வேலை நேர உத்தரவால் குழப்பம் | மதுரை செய்திகள் | Dinamalar
கடைகளின் வேலை நேர உத்தரவால் குழப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2021
10:02

மதுரை:அரசு ஜூன் 5ல் வெளியிட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் வணிக நிறுவனங்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பாடலாம் என தெரிவித்திருந்தது. தற்போது ஜூன் 14 முதல் 21வரையான தளர்வு குறித்த அறிவிப்பில் வேலை நேரம் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இலகு உத்யோக் பாரதி மதுரை கிளை தலைவர் ஞானசம்பந்தன் கூறியதாவது: அரசு உத்தவு படி 33 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதித்தாலும் தற்போதய நேரம் மிகக்குறைவானதாக உள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படும். காலை 10:00 முதல் இரவு 7:00 வரை செயல்பட அனுமதிக்க வேண்டும். சிறிய ஆயிரம் 1000 சதுரஅடிக்கு உட்பட்ட ஜவுளிக்கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.சிறு குறு நிறுவனங்களுக்கும் மாரடோரியம் பெற்று தர மத்திய அரசு மூலம் ரிசர்வ் வங்கிக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X