மந்தம்: கடலூர் மாவட்டத்தில் மது விற்பனை...காற்று வாங்கிய டாஸ்மாக் கடைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
05:47

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, 5வது கட்டமாக வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



இந்த ஊரடங்கில் மதுபான கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் 10ம் தேதி முதல் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், 35 நாட்களுக்கு பிறகு நேற்று காலை 10:00 மணிக்கு திறக்கப்பட்டன.நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறப்பதால், கொரானோ தொற்று பரவாமல் தடுக்க, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆலோசனை நடத்தினார்.



அப்போது, டாஸ்மாக்கில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைத்து, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு மதுபானம் வழங்கக்கூடாது, கூடுதலாக மதுபானங்கள் வழங்கக் கூடாது.கடைகளை கிருமி நாசினி கொண்டும், சுற்றி பிளிச்சிங் பவுடர் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மதுக்கடைகள் முன்பு தடுப்பு கட்டைகள் கட்டுவது, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்து, நேற்று காலை 10:00 மணியளவில், மாவட்டத்தில் உள்ள 147 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.விற்பனை டல்ஆனால், எதிர்பார்த்த அளவில் குடிப்பிரியர்கள் வரவில்லை. கடந்த காலங்களில் அதிகாலையிலேயே கடைக்கு வந்து டோக்கன் பெற்று மணிக்கணக்கில் காத்திருந்த நிலையில், மாவட்டம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளில் விற்பனை 'டல்' அடித்தது.சமீபத்தில் கடைகள் அடைப்பதற்கு முன்பு ஒரே நாளில் ரூ. 9.70 கோடிக்கு மது விற்பனை நடந்தது. ஆனால், நேற்று வழக்கமான நாட்களில் நடக்கும் விற்பனை கூட நடக்கவில்லை என, டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடலுார் மட்டுமின்றி, சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, வடலுார் உள்ளிட்ட அனைத்து பகுதி கடைகளிலும் இதே நிலை இருந்தது.காரணம் என்னபுதுச்சேரியில் கடந்த 8 ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாதால், கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள புதுச்சேரி மதுக்கடைகளுக்கு தமிழக பகுதியினர் குவிந்தனர். குறிப்பாக, கடலுார் பகுதி குடிபிரியர்கள், கன்னியக்கோவில், குருவிநத்தம் உள்ளிட்ட பகுதி மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர். காய்ந்து கிடந்த கடலுார் பகுதி குடிமகன்கள், மிகுந்த உற்சாகத்துடன் தலைக்கேறும் வரை குடித்தனர். கையில் இருந்த பணம் மற்றும் கடன் வாங்கி சென்று, முடிந்த அளவிற்கு மது வாங்கி இருப்பு வைத்துக்கொண்டனர்.தமிழகத்திற்கு முன்புதுச்சேரி முந்திக்கொண்டு மதுக்கடைகள் திறந்ததும், கொரோனா ஊரடங்கு காரணமாக கூலி தொழிலாளர்களுக்கு வருமானம் இல்லாததும் மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை 'டல்' அடித்ததிற்கு காரணமாக கூறப்படுகிறது.மேலும், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுவதற்கு முன்பாக அத்தனை சரக்குகளும் விற்று தீர்த்துவிட்ட நிலையில் புதிய சரக்கு வந்து சேரவில்லை. கூடுதல் விலையுள்ள சரக்குகள் மட்டுமே இருந்ததால் விற்பனையாகவில்லை என, பணியாளர்கள் கூறினர்.



மேலும் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீக்கப்பட்டு விலை பாதியாக குறைந்துள்ளதால் அங்கு அதிகமானோர் படையெடுத்து வருகின்றனர். இதுவும் கடலுார் மாவட்ட டாஸ்மாக் விற்பனை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.இரண்டாம் கட்ட கொரோனா நிவாண நிதி ரூ. 2000 இன்று முதல் வழங்க உள்ளநிலையில், டாஸ்மாக் விற்பனை சூடுபிடிக்கும் என டாஸ்மாக் பணியாளர்கள் நம்புகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202108:29:27 IST Report Abuse
Tgsoundarrajan Balu கடலூரில்தான் குடும்பத்தின் மேல் அக்கறைஉள்ளவர்கள் அதிகம் உள்ளனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X