திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடைகள் திறப்பு; காற்றில் பறந்த கொரோனா விதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
06:12

திண்டுக்கல் : ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் கடைகளை திறந்ததால், திண்டுக்கல்லில் மதுப்பிரியர்கள் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு பாட்டில்களை பெற்றுச் சென்றனர்.



கொரோனா பரவலை தடுக்க மே 10 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று குறைந்து வரும் நிலையில், 35 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில் தடுப்பு வேலிகள், சானிடைசர் ஏற்பாடு செய்திருந்தனர். முகக்கவசம் அணிந்தவருக்கே மதுபாட்டில் வழங்கினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.காலை 10:00 மணிக்கு சில கடைகளில் மதுபாட்டில்கள் இல்லை. ஏமாந்தவர்கள் பிறகடைகளை தேடி அலைந்தனர். கிடைத்தவர்களில் சிலர் மதுபாட்டிலுக்கு தீபாராதனை காட்டினர்.



மதியம் 1:00 மணிக்கு பிறகு கடைகளுக்கு பாட்டில்கள் சப்ளையாகி, கூட்டம் அலைமோதியதால், கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்தன.பழநி: பழநி, திண்டுக்கல் மாவட்ட பழநி அய்யம்பாளையம் பிரிவு, வயலூர், சாமிநாதபுரம், செங்குளம், கந்தப்ப கவுண்டன் வலசு கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது. திருப்பூர், கோவை மாவட்டத்தினர் திரண்டதால் சிறிது நேரத்தில் சரக்குகள் விற்று தீர்ந்தன.



பழநி நகரில் ஆர். எப் ரோடு, இட்டேரி ரோடு டாஸ்மாக் கடைகளில் திரண்ட கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.குஜிலியம்பாறை: கரூர் மாவட்டத்தினரும் திண்டுக்கல் எல்லையோரம் ஆர்.வெள்ளோடு, டி.கூடலுார், பாளையம், சேர்வைகாரன்பட்டியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் மாவட்டத்தினரே பெறும் வகையில் ஆதார் கார்டை பெற வேண்டும் என இங்குள்ளவர்கள் வலியுறுத்தினர். பல கடைகளில் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X