பட்டாபிராமில் வாலிபர் கொலை | சென்னை செய்திகள் | Dinamalar
பட்டாபிராமில் வாலிபர் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2021
06:38

பட்டாபிராம்-பட்டாபிராம் அருகே, முன் விரோதம் காரணமாக, வாலிபர் அடித்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அடுத்த பட்டாபிராம், உழைப்பாளர் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 25. போதை பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று மாலை, 4:30 மணி அளவில், பாரத மாதா தெருவில் நடந்து சென்றார்.அப்போது, இரண்டு டூ - வீலர்களில் வந்தவர்கள், அவரை சுற்றி வளைத்து, செங்கலால் அடித்தனர். பலத்த காயமடைந்த பிரசாந்த், சம்பவ இடத்தில் பலியானார்.அவரை கொலை செய்த கும்பல் தப்பியது. போதை தகராறில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.இது குறித்து, பட்டா பிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X