காவலரை தாக்கியவர் கைது | சென்னை செய்திகள் | Dinamalar
காவலரை தாக்கியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
05:45

கொடுங்கையூர் : கொடுங்கையூரில், காவலர் மீது தாக்குதல் நடத்திய அ.தி.மு.க., நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.



சென்னை, மாதவரம் பால் பண்ணை, ஆவின் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 37; நுண்ணறிவு பிரிவு கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகிறார்.இவர், கொடுங்கையூர், முத்தமிழ் நகர், இரண்டாவது பிரதான சாலையில் உள்ள, உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், ஆறாவது பிளாக்கைச் சேர்ந்த, அ.தி.மு.க., வடகிழக்கு மாவட்ட மாணவரணி பகுதி செயலர் கார்த்திக், 37, என்பவர், குடிபோதையில் வெங்கடேஷ் பைக்கை எட்டி உதைத்து, ஒருமையில் திட்டி, அவரை தாக்கினார்.இது தொடர்பாக, வெங்கடேஷ் கொடுத்த புகாரின்படி, கார்த்திக்கை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X