'ஸ்விகி' ஊழியரை தாக்கிய மர்ம கும்பலுக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
05:50

வளசரவாக்கம் : வளசரவாக்கம் அருகே, 'ஸ்விகி' ஊழியர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி தப்பிய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.



பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன், 32. இவர், 'ஸ்விகி' எனும் 'ஆன்லைன்' வாயிலாக உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவர், நேற்று, வளசரவாக்கத்தில் உணவு வினியோகம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். வளசரவாக்கம், என்.எஸ்.கே., சாலையில் சென்றபோது, மற்றொரு வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர், நீலகண்டனை முந்தி செல்ல முயன்றனர்.இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இளைஞர்கள், நீலகண்டனின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து கொண்டு, தங்களது நண்பர்களை வரவழைத்து, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.



இதைக்கண்ட பொதுமக்கள் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். நீலகண்டனை மீட்டதோடு, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கும், பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் .வளசரவாக்கம் போலீசார், அங்கிருந்தவர்கள் மொபைல் போனில் எடுத்த காட்சிகளை வைத்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X