3.66 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
05:58

காஞ்சிபுரம் : தமிழகம் முழுதும் கொரோனா நிவாரண தொகையாக, இரண்டாம் கட்டமாக 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்குவது நேற்று துவங்கியுள்ளது.



காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கையில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், செல்வபெருந்தகை, எழிலரசன் மற்றும் எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட நிவாரண தொகையான 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3.66 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.அதே நிகழ்ச்சியில், திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், 300 பயனாளிகளுக்கு 78.25 லட்சம் ரூபாய் உதவித்தொகையும், தலா 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர்கோவில் பகுதி ரேஷன் கடையில், அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கி அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில் 3.95 லட்சம் அட்டைதாரர்களுக்கு 79.15 கோடி ரூபாய், நிவாரண தொகையாக வழங்கப்படுகிறது. முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, நிவாரண நிதி வழங்குகிேறாம். அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும், பொதுமக்களை அடையும்.சாதாரண பஸ்களில், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் இலவசமாக பயணம் செய்யலாம்.



கொரோனாவில் இறந்த, மருத்துவ, காவல் துறையினருக்காக 54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இக்கட்டான நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்றபோது, படுக்கைகள் பற்றாக்குறை இருந்தது. இப்போது, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு பரவல் குறைந்துள்ளது. பொது போக்குவரத்து விரைவில் துவங்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.திருப்போரூர் வட்டத்தில், 48 ஆயிரத்து 3 அட்டைதாரர்களுக்கு 91 ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கும் திட்டம், நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது.



குரங்கு செய்த சேட்டைதிருக்கழுக்குன்றம், நால்வர்கோவில் பகுதி, ரேஷன் கடையில், நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இந்நிகழ்வு துவங்கும் முன், காலை, 9:30 மணிக்கு, அமைச்சர் அன்பரசனிடம், கோரிக்கை மனுக்கள் அளிக்க, பலர் காத்திருந்தனர். அப்போது, வடிகால்வாய் பாலத்தில், மனுவுடன் அமர்ந்திருந்த ஒருவர் மீது குரங்கு ஏறி, தோளில் அமர்ந்தது.தலைமுடியை சிலுப்பி, அவர் வைத்திருந்த மனுவை கசக்கியது. சட்டை பையில் இருந்த பேனா உள்ளிட்டவற்றை, துாக்கி வீசியது. 10 நிமிடங்களுக்கு பின், சற்றுதொலைவில் ஒருவர், தின்பண்டம் வைத்தது கண்டு, அவரை நோக்கி ஓடியது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X