தயார்! புதுச்சேரி சட்டசபைக்கு போட்டியின்றி...வரும் 21ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2021
06:05

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி, கடந்த மே 7ல் முதல்வராக பொறுப்பேற்றார்.அமைச்சர் பதவிகளை பங்கீடு செய்வதில் இரு கட்சிகளிடையே குழப்பம் நிலவியது.



ஒரு வழியாக, கடந்த வாரம் சமரச தீர்வு ஏற்பட்டது.அதில், பா.ஜ.,விற்கு சபாநாயகர், இரு அமைச்சர் பதவியும், என்.ஆர்.காங்., கட்சிக்கு துணை சபாநாயகர், மூன்று அமைச்சர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பா.ஜ., சார்பில் கடந்த 11ம் தேதி, சபாநாயகர் பதவிக்கான பெயர் பட்டியலை முதல்வரிடம் வழங்கினர்.இந்நிலையில், புதுச்சேரியின் 15வது சட்டசபை கூட்டத்தை இன்று 16ம் தேதி கூட்டவும், அன்றே புதிய சபாநாயகரை தேர்வு செய்யவும் கவர்னர் உத்தரவிட்டார்.அதனையேற்று, சட்டசபை செயலர் முனிசாமி, கடந்த 12ம் தேதி சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.



நேற்று முன்தினம் பா.ஜ.,வை சேர்ந்த செல்வம் எம்.எல்.ஏ., சபாநாயகர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, சட்டசபை பா.ஜ., தலைவர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிந்தனர்.மனு தாக்கல் நேற்று பகல் 12:00 மணியோடு முடிந்த நிலையில், வேறு எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வம், போட்டியின்றி சபாநாயகராக தேர்வாகி உள்ளார்.இதற்கான அறிவிப்பை, இன்று காலை 9:30 மணிக்கு கூடும் சட்டசபையில். தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் அறிவிக்க உள்ளார்.



அதனைத் தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை, அவை முன்னவரான முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர், அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கின்றனர்.அவரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டி பேசுகின்றனர். இறுதியில் சபாநாயகர் செல்வம் நன்றி தெரிவித்து உரையாற்ற உள்ளார்.இந்நிலையில், இன்று காலை சபாநாயகர் பதவி ஏற்றதும், மாலையில் அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்பாடும் நடைபெறவில்லை.அமைச்சர்கள் பெயர் பட்டியலை கவர்னரிடம் முதல்வர் வழங்க வேண்டும்.



அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகே அமைச்சர்கள் பதவியேற்க முடியும்.இந்த பணிகள் எதுவும் நடைபெறாததால், இன்று அமைச்சர்கள் பதவியேற்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.பா.ஜ., துணை முதல்வர் பதவி கேட்டது. இப்பிரச்னையால் அமைச்சரவை பதவியேற்பு தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. தற்போது அந்த கோரிக்கையில் இருந்து பா.ஜ., இறங்கிவந்துள்ளது. பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் சமரசம் ஏற்பட்டுள்ளதால், வரும் 21ம் தேதி பகல் 12:15 மணிக்கு அமைச்சர்கள் பதவியேற்பு நடக்க உள்ளது.பு



திய வரலாறு:புதுச்சேரி அரசியல் வரலாற்றில், கடந்த 2001 சட்டசபை தேர்தலில் ரெட்டியார் பாளையம் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.அதன்பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.,வில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இல்லை. கடந்த சட்டசபையில் பா.ஜ.,வை சேர்ந்த மூவர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர்.இருபது ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.



அதில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற செல்வம், இன்று சபாநாயகராக பதவி ஏற்கிறார்.புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ.,வை சேர்ந்தவர் சபாநாயகராக பதவி ஏற்பது இதுவே முதல்முறை.21வது சபாநாயகர்புதுச்சேரி சட்டசபையில் இதுவரை 20 பேர் சபாநாயகர்களாக பதவி வகித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-------------------------------------------வ.எண் பெயர் பதவி வகித்த ஆண்டு--------------------------------------------1. காங்கேயன் 22.07.1963 முதல் 24.8.19642. எம்.ஓ.எச்.பாரூக் 19.9.1964 முதல் 19.3.19673. சண்முகம் 30.3.1967 முதல் 9.3.19684. மாணிக்கவாசகம் 25.3.1968 முதல் 22.3.19695. பெருமாள் 22.3.1969 முதல் 2.12.19716. செல்வராஜன் 29.3.1972 முதல் 3.1.19747. பாக்கியம் 26.3.1974 முதல் 28.3.19748. காந்தி 13.7.1977 முதல் 12.11.19789. எம்.ஓ.எச்.பாரூக் 25.1.1980 முதல் 24.6.198310. காமி செட்டி எஸ்.வி.ராவ் நாயுடு-27.3.1985 முதல் 19.1.198911. சந்திரகாசு 29.3.1989 முதல் 5.3.199012 பழனிராஜா 22.3.1990 முதல் 4.3.199113. கண்ணன் 26.7.1991 முதல் 14.5.199614. வி.எம்.சி.சிவக்குமார் 10.6.1996 முதல் 18.3.200015. ஏ.வி.சுப்ரமணியன் 24.5.2000 முதல் 31.5.200116. ராமச்சந்திரன் 11.6.2001 முதல் 26.5.200617. ராதாகிருஷ்ணன் 1.6.2006- மே 2011 வரை18. சபாபதி 29.6.2011 - 1.5.201619. வைத்திலிங்கம் 10.6.2016 - 21.3. 201920. சிவக்கொழுந்து - 3.6.2019 - 2021 வரை

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X